• May 18 2024

நடுக்கடலில் தத்தளிக்கும் 4 இலட்சம் கிலோகிராம் பால் மா - வெளியான அறிவிப்பு

harsha / Dec 12th 2022, 4:10 pm
image

Advertisement

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் அனுமதி கிடைக்காத காரணத்தினால் துறைமுகத்தில் சிக்கியிருந்த 4 இலட்சம் கிலோகிராம் பால் மாவை 118 மில்லியன் ரூபா வங்கி உத்தரவாதத்தில் விடுவித்ததாக பியோடேல் பால் பவுடர் நிறுவனத்தின் தலைவர் டொக்டர் லக்ஷ்மன் விஜேசூரிய தெரிவித்தார்.

பால் மா கையிருப்பு வெளியிடப்படாவிட்டால் கெட்டுப்போகும் அபாயம் காணப்படுவதாகவும் அவ்வாறு நடந்தால் 600 மில்லியன் ரூபா நஷ்டத்தை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது.

இதன்படி, 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா பொதி ஒன்றின் புதிய விலை 1240 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது வரை நாட்டில் பால்மா தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நடுக்கடலில் தத்தளிக்கும் 4 இலட்சம் கிலோகிராம் பால் மா - வெளியான அறிவிப்பு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் அனுமதி கிடைக்காத காரணத்தினால் துறைமுகத்தில் சிக்கியிருந்த 4 இலட்சம் கிலோகிராம் பால் மாவை 118 மில்லியன் ரூபா வங்கி உத்தரவாதத்தில் விடுவித்ததாக பியோடேல் பால் பவுடர் நிறுவனத்தின் தலைவர் டொக்டர் லக்ஷ்மன் விஜேசூரிய தெரிவித்தார்.பால் மா கையிருப்பு வெளியிடப்படாவிட்டால் கெட்டுப்போகும் அபாயம் காணப்படுவதாகவும் அவ்வாறு நடந்தால் 600 மில்லியன் ரூபா நஷ்டத்தை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது.இதன்படி, 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா பொதி ஒன்றின் புதிய விலை 1240 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் தற்போது வரை நாட்டில் பால்மா தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement