• May 18 2024

பதவி பறிபோகும் நிலையில் 83 நாடாளுமன்ற உறுப்பினர்கள்..!

Chithra / Apr 8th 2024, 8:27 am
image

Advertisement

 

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் பதவியை இழக்க நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் 83 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு நாள் கூட நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை என வெரிட்டி ரிசர்ச்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர்களை பேரவைக்கு அழைக்கும் விடயத்தில் சபாநாயகர் தலையிட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பதவி பறிபோகும் நிலையில் 83 நாடாளுமன்ற உறுப்பினர்கள்.  மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் பதவியை இழக்க நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.ஜனவரி மாதத்தில் 83 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு நாள் கூட நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை என வெரிட்டி ரிசர்ச்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர்களை பேரவைக்கு அழைக்கும் விடயத்தில் சபாநாயகர் தலையிட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement