• May 06 2024

சூரியனின் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்! - காலநிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

Chithra / Apr 8th 2024, 8:08 am
image

Advertisement

 

மாராவில், பொதுஹெர, குருகெட்டே, கல்முனை, கெர்தலாவெல மற்றும் வராப்பிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக இன்று (08) நண்பகல் 12:12 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலநிலை ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, சூரியன் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ,​ தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் - காலநிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை  மாராவில், பொதுஹெர, குருகெட்டே, கல்முனை, கெர்தலாவெல மற்றும் வராப்பிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக இன்று (08) நண்பகல் 12:12 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.காலநிலை ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.இதன்படி, சூரியன் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.இதேவேளை மேல், சப்ரகமுவ,​ தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement