• Nov 17 2024

பாடசாலை பேருந்து மோதியதில் 4 வயது சிறுவன் பரிதாப மரணம்...! அம்பாறையில் சோகம்..!

Sharmi / Mar 1st 2024, 9:46 am
image

பாடசாலை சேவையில் ஈடுபடும் சிற்றூர்தி மோதியதில் 4 வயது சிறுவன் ஒருவன் நேற்றையதினம்(29) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றின்  முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், வீட்டின்  வெளிப்புற கதவு தற்செயலாக திறந்த நிலையில் வீதியை நோக்கி ஓடிய வேளை,  அவ்வழியால் வந்த பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும்  சிற்றூர்தி மோதியதில் குறித்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எ கொண்டுசெல்லப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் பெரிய நீலாவணை விஷ்ணு வித்தியாலய வீதியை சேர்ந்த  4 வயதுடைய அருணா ஹர்ஷான் என தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனின் சகோதரியை ஏற்ற வந்த சிற்றூர்தியே  சிறுவனை மோதியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த சிறுவனின் உடல் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் சிறுவனின் உடல்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



பாடசாலை பேருந்து மோதியதில் 4 வயது சிறுவன் பரிதாப மரணம். அம்பாறையில் சோகம். பாடசாலை சேவையில் ஈடுபடும் சிற்றூர்தி மோதியதில் 4 வயது சிறுவன் ஒருவன் நேற்றையதினம்(29) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றின்  முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், வீட்டின்  வெளிப்புற கதவு தற்செயலாக திறந்த நிலையில் வீதியை நோக்கி ஓடிய வேளை,  அவ்வழியால் வந்த பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும்  சிற்றூர்தி மோதியதில் குறித்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எ கொண்டுசெல்லப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்த சிறுவன் பெரிய நீலாவணை விஷ்ணு வித்தியாலய வீதியை சேர்ந்த  4 வயதுடைய அருணா ஹர்ஷான் என தெரிவிக்கப்படுகிறது.சிறுவனின் சகோதரியை ஏற்ற வந்த சிற்றூர்தியே  சிறுவனை மோதியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.உயிரிழந்த சிறுவனின் உடல் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் சிறுவனின் உடல்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement