• Sep 08 2024

பிச்சை எடுத்து யுத்தம் செய்த ஒரு நாடு - இன்று பிச்சைக்காக சமாதானம் செய்கின்றது!

Chithra / Jan 8th 2023, 1:34 pm
image

Advertisement

கடந்த காலத்தில் கடன்வாங்கி அல்லது பிச்சை எடுத்து யுத்தம் செய்த ஒருநாடு இன்று பிச்சை எடுப்பதற்காக சமாதானம் செய்ய முற்படுவதாக அரசியல் ஆய்வாளரான நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றும் ஒரு நூதனமானது என தெரிவித்துள்ள அவர், பிச்சையெடுத்துச் செய்த யுத்தம் உண்மையானது என்றும், ஆனால் பிச்சை எடுப்பதற்காக செய்யும் சமாதானம் உண்மையானதா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த போகிறோம் என்று அரசாங்கம் கூறுமாக இருந்தால்

அது இந்தியாவுக்கும் விருப்பமாகத்தான் இருக்கும் என்றும் நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆறாம் தேதி தமிழ்நாட்டில் ஒரு கருத்தரங்கு இடம்பெற்றது. அதன் தலைப்பு 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு தீர்வை ஈழத்தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசைக் கோரும் நோக்கில் அமைந்திருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகள் 13-வது திருத்தத்தை தாண்டாமல் இருப்பதற்கு

ரணில் இந்தியாவிடமிருந்து உதவியை எதிர்பார்க்கக்கூடும் என்றும் நிலாந்தன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.


பிச்சை எடுத்து யுத்தம் செய்த ஒரு நாடு - இன்று பிச்சைக்காக சமாதானம் செய்கின்றது கடந்த காலத்தில் கடன்வாங்கி அல்லது பிச்சை எடுத்து யுத்தம் செய்த ஒருநாடு இன்று பிச்சை எடுப்பதற்காக சமாதானம் செய்ய முற்படுவதாக அரசியல் ஆய்வாளரான நிலாந்தன் தெரிவித்துள்ளார்.இந்த மாற்றும் ஒரு நூதனமானது என தெரிவித்துள்ள அவர், பிச்சையெடுத்துச் செய்த யுத்தம் உண்மையானது என்றும், ஆனால் பிச்சை எடுப்பதற்காக செய்யும் சமாதானம் உண்மையானதா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த போகிறோம் என்று அரசாங்கம் கூறுமாக இருந்தால்அது இந்தியாவுக்கும் விருப்பமாகத்தான் இருக்கும் என்றும் நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.கடந்த ஆறாம் தேதி தமிழ்நாட்டில் ஒரு கருத்தரங்கு இடம்பெற்றது. அதன் தலைப்பு 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு தீர்வை ஈழத்தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசைக் கோரும் நோக்கில் அமைந்திருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.எனவே நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகள் 13-வது திருத்தத்தை தாண்டாமல் இருப்பதற்குரணில் இந்தியாவிடமிருந்து உதவியை எதிர்பார்க்கக்கூடும் என்றும் நிலாந்தன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement