பறக்கும் கார்? வாகனங்களின் வளர்ச்சியில் புதிய புரட்சி!

உலகம் முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருள் அல்லது சூரிய சக்தியில் இயங்கக் கூடிய வாகனங்களைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஜப்பானில் பறக்கும் காருக்கான முதல் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இரண்டு இருக்கைகள் கொண்ட தானியங்கி பறக்கும் காரின் முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருகையில்,

ஜப்பானில் உள்ள ஒய்டா நகரில் உள்ள நோட்சுஹாரு டெங்கு ஹிரோபா பூங்காவில் MASC நிறுவனத்தின் பறக்கும் காரின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.

MASC என்பது குரோஷி மற்றும் ஒகயாமாவை நிர்வாகிக்கும் ப்ரிஃபெக்சர் அமைப்பு ஆகும்.

இது இந்த பறக்கும் காரை வணிக ரீதியாக விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

எக்ஸ்போ 2025 ஒசாகா, கன்சாயில் பறக்கும் காரின் ஆளில்லா விமானத்தை இயக்குவதை MASC நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுவரை, ஒகயாமா மற்றும் பிற மாகாணங்களில் பறக்கும் கார் சோதனை ஓட்டத்தை நடத்தியுள்ளது.

பறக்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியில் MASC உடன் இணைந்து ஒய்டா நகர நிர்வாகம் இறங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் ஜூலை 13ம் தேதி அன்று நிறைவேறியுள்ளது.

இந்த பறக்கும் கார் ஆனது தோராயமாக 5.6 மீட்டர் நீளமும் 1.7 மீட்டர் உயரமும் இருக்கும் என்றும், 16 ப்ரொப்பல்லர்களின் இயக்கம் மூலம் கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு இந்த பறக்கும் கார் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு இருக்கைகளைக் கொண்ட ஆளில்லாத இந்த பறக்கும் காரின் முதற்கட்ட சோதனை ஓட்டம், தானியங்கி கட்டுப்பாட்டின் கீழ் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக முன்னும், பின்னுமாக 520 மீட்டர்கள் வரை வானில் செங்குத்தாகப் பறக்கும் கார் பறந்துள்ளது.

பறக்கும் கார்கள் மீதான மனிதர்களின் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

இதற்கான முதல் விமான நிலையம் ஏற்கனவே இங்கிலாந்தில் தயாராகியுள்ளது.

லண்டனை தளமாகக் கொண்ட அர்பன்-ஏர் போர்ட் லிமிடெட் (UAP) பறக்கும் கார்களுக்கான விமான நிலையத்திற்கான இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஏர் ஒன் என்று அழைக்கப்படும் இந்த வசதி வெறும் 15 மாதங்களில் முடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

லண்டனிலிருந்து 155 கிமீ தொலைவில் உள்ள கோவென்ட்ரியில் அமைந்துள்ள இந்த வசதி UAP மற்றும் கோவென்ட்ரி சிட்டி கவுன்சில் இடையே உருவாக்கப்பட்டுள்ளது.

பறக்கும் கார்கள் வெகு அளவிலான பயன்பாட்டிற்கு இன்னும் தயாராகவில்லை என்பதால், ஏர் ஒன் எந்த நேரத்திலும் திறக்கப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதற்கு முன்னதாக இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான சுசூகி நிறுவனம், ஜப்பானில் பறக்கும் கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஸ்கைட்ரைவ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை