• May 18 2024

யாழில் புதிய திட்டங்களுடன் பலருக்கு வேலைவாய்ப்பினை வழங்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்!

Sharmi / Jan 11th 2023, 12:01 am
image

Advertisement

யாழ். நீர்வேலிப் பகுதியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 1500 வரையான மாமரங்களை உருவாக்கி, உள்ளூர் விவசாயிகள் பலருக்கு வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர் புதிய வேலைவாய்ப்புக்களை வழங்கியிருக்கிறார். 

கவனிப்பார் அற்றுக்கிடக்கும் நிலங்களைக் கொள்வனவு செய்து ( அல்லது குத்தகைக்கு எடுத்து ) , துப்புரவாக்கி, அதில் பயன்தரும் மரம்செடிகளை நட்டு, 50 வரையான விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கும் இந்த முதலீட்டாளரின் பெயர் ஜஸ்டின் குமார். தாயகத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசிக்கிறார். 

இவரின் மற்றொரு புதிய முயற்சியாக மஞ்சளைப் பயிரிட்டு அதிலும் வெற்றி கண்டிருக்கிறார். மஞ்சளை ஏற்றுமதி செய்வதன்மூலம் அதிகலாபம் கிடைக்கிறது என்கிறார் அவர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகம் கிராக்கியுள்ள பயிரினங்களை பயிரிட்டு, தாயக விவசாயத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவது இவரின் நோக்கம். 

வெளிநாடுகளில் அதிகம் பிரபலமான TomEJC எனும் மாம்பழங்களே இவரது தோட்டங்களில் பயிரிடப்படுகின்றன. ஒவ்வொரு பழமும் 500g, 600g வரையான எடையைக் கொண்டவை. மாம்பழ ஜூஸ் தயாரிப்பதற்கு அதிகம் பயன்படுத்தப்படுவதும் இந்தவகையான மாம்பழங்கள்தான். 

உள்ளூரில் இருக்கும் ஏனைய விவசாயிகளை ஒன்றிணைத்து ஒரு கூட்டுமுயற்சியாக ( Cluster Farming ) செயல்படுவது இவரின் இன்னொரு நோக்கம். அதன்படி இவரிடமிருந்து மாமரச் செடிகளையோ, மஞ்சளையோ கொள்வனவு செய்து பயிரிடமுடியும்.என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்  ஜஸ்டின் குமாருக்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


யாழில் புதிய திட்டங்களுடன் பலருக்கு வேலைவாய்ப்பினை வழங்கிய வெளிநாட்டு முதலீட்டாளர் யாழ். நீர்வேலிப் பகுதியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 1500 வரையான மாமரங்களை உருவாக்கி, உள்ளூர் விவசாயிகள் பலருக்கு வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர் புதிய வேலைவாய்ப்புக்களை வழங்கியிருக்கிறார். கவனிப்பார் அற்றுக்கிடக்கும் நிலங்களைக் கொள்வனவு செய்து ( அல்லது குத்தகைக்கு எடுத்து ) , துப்புரவாக்கி, அதில் பயன்தரும் மரம்செடிகளை நட்டு, 50 வரையான விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கும் இந்த முதலீட்டாளரின் பெயர் ஜஸ்டின் குமார். தாயகத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசிக்கிறார். இவரின் மற்றொரு புதிய முயற்சியாக மஞ்சளைப் பயிரிட்டு அதிலும் வெற்றி கண்டிருக்கிறார். மஞ்சளை ஏற்றுமதி செய்வதன்மூலம் அதிகலாபம் கிடைக்கிறது என்கிறார் அவர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகம் கிராக்கியுள்ள பயிரினங்களை பயிரிட்டு, தாயக விவசாயத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவது இவரின் நோக்கம். வெளிநாடுகளில் அதிகம் பிரபலமான TomEJC எனும் மாம்பழங்களே இவரது தோட்டங்களில் பயிரிடப்படுகின்றன. ஒவ்வொரு பழமும் 500g, 600g வரையான எடையைக் கொண்டவை. மாம்பழ ஜூஸ் தயாரிப்பதற்கு அதிகம் பயன்படுத்தப்படுவதும் இந்தவகையான மாம்பழங்கள்தான். உள்ளூரில் இருக்கும் ஏனைய விவசாயிகளை ஒன்றிணைத்து ஒரு கூட்டுமுயற்சியாக ( Cluster Farming ) செயல்படுவது இவரின் இன்னொரு நோக்கம். அதன்படி இவரிடமிருந்து மாமரச் செடிகளையோ, மஞ்சளையோ கொள்வனவு செய்து பயிரிடமுடியும்.என தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில்  ஜஸ்டின் குமாருக்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement