• May 21 2024

யாழில் மாடுகளைத் திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்த கும்பல் சிக்கியது! samugammedia

Chithra / Apr 22nd 2023, 1:20 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பகுதிகளில் மாடுகளை களவாடி இறைச்சியாக்கி விற்பனை செய்த கும்பலின் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

திருட்டுக் கும்பலிடம் இறைச்சியை வாங்கி விற்பனை செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறிய பொலிஸார், மேலும் நால்வர் தேடப்படுவதாகக் குறிப்பிட்டனர்.

வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த 24, 26 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர், வட்டுக்கோட்டை, அளவெட்டி, தெல்லிப்பழை, வடமராட்சி உள்ளிட்ட பிரதேசங்களில் 25 இற்கும் மேற்பட்ட மாடுகளைத் திருடு இறைச்சியாக்கி விற்பனை செய்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

5 பேர் கொண்ட கும்பல், பகலில் மோட்டார் சைக்கிளில் சென்று மாடுகளை நோட்டுமிட்டு வந்து இரவில் வாகனத்தில் சென்று இரும்புச் சங்கிலி போட்டு மாடுகளை ஏற்றி வந்து கப்பூது வெளியில் வைத்து இறைச்சியாக்கி விற்பனை செய்துள்ளது.

இறைச்சியடிக்கப்பட்ட மாடுகளின் எச்சங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம், இரும்புச் சங்கிலி மற்றும் வாள் ஒன்றும் முதன்மைச் சந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூறினர்.

சந்தேக நபருக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குகள் உள்ளன என்றும் பொலிஸார் கூறினர்.

யாழில் மாடுகளைத் திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்த கும்பல் சிக்கியது samugammedia யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பகுதிகளில் மாடுகளை களவாடி இறைச்சியாக்கி விற்பனை செய்த கும்பலின் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.திருட்டுக் கும்பலிடம் இறைச்சியை வாங்கி விற்பனை செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறிய பொலிஸார், மேலும் நால்வர் தேடப்படுவதாகக் குறிப்பிட்டனர்.வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த 24, 26 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மாநகர், வட்டுக்கோட்டை, அளவெட்டி, தெல்லிப்பழை, வடமராட்சி உள்ளிட்ட பிரதேசங்களில் 25 இற்கும் மேற்பட்ட மாடுகளைத் திருடு இறைச்சியாக்கி விற்பனை செய்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.5 பேர் கொண்ட கும்பல், பகலில் மோட்டார் சைக்கிளில் சென்று மாடுகளை நோட்டுமிட்டு வந்து இரவில் வாகனத்தில் சென்று இரும்புச் சங்கிலி போட்டு மாடுகளை ஏற்றி வந்து கப்பூது வெளியில் வைத்து இறைச்சியாக்கி விற்பனை செய்துள்ளது.இறைச்சியடிக்கப்பட்ட மாடுகளின் எச்சங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம், இரும்புச் சங்கிலி மற்றும் வாள் ஒன்றும் முதன்மைச் சந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூறினர்.சந்தேக நபருக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குகள் உள்ளன என்றும் பொலிஸார் கூறினர்.

Advertisement

Advertisement

Advertisement