• May 10 2024

உண்பது உறங்குவது எல்லாமே காரில்தான்; 71 வயதில் உலகம் சுற்றும் வெளிநாட்டு தம்பதி! samugammedia

Chithra / Apr 22nd 2023, 1:30 pm
image

Advertisement

ஜெர்மனியைச் சேர்ந்த ஹூல்ஸ்சர் என்பவர் மனைவி ஐரின் ருனேலர் உடன் வீட்டை போல் உருவாக்கிய உயர் ரக காரில் பல்வேறு நாடுகளில் வலம் வருகிறார்.

பொதுவாகவே மேலை நாடவர்கள் குறிப்பிட்ட காலம் வரை உழைத்து பணம் சேர்த்த பின்னர் அதில் பெரும் தொகையை சுற்றுலா செல்வதற்காக செலவு செய்வார்கள். அப்படித்தான் இந்த ஜெர்மனி தம்பதியும் கடந்த 2018 ஆம் ஆண்டு தங்களது உலகப் பயணத்தை துவங்கி உள்ளனர்.

ஜெர்மனியில் இருந்து பின்லாந்து, துருக்கி, ஈரான், கஜகஸ்தான், மங்கோலியா, சீனா என 20 நாடுகளை கடந்து தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளனர்.

இவர்கள் செல்லும் இடங்களில் விடுதியில் தங்குவதில்லை. அவர்களது சொகுசு வாகனத்திலேயே றங்க, உணவு சமைக்க என அனைத்து வசதிகளும் . சுமார் 5 ஆண்டுகளாக அதே வாகனத்தில் தம்பதிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெர்மனி தம்பதி தற்போது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் வந்துள்ளனர். தஞ்சை பெரியகோயிலை சுற்றி பார்த்துவிட்டு அங்கு நடந்த கலை நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.

இந்நிலையில் தமது சுற்றுப்பயணம் தொடர்பில் தம்பதிகள் கூறுகையில்,


2018ல் தனது மனைவியுடன் தொடங்கி இந்த சுற்றுலா பயணம் சுமார் ஐந்து ஆண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், இதற்கு அடுத்ததாக இந்தோனேசியா ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் மூன்று மாதங்களாக தங்கி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வந்ததாக தெரிவித்த அவர், இந்தியா ஒரு நல்ல நாடு எனவும் கோடை காலம் என்பதால் மிகுந்த வெப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தஞ்சை பெரிய கோயில் தங்களுக்கு வியப்பளிப்பதாக உள்ளதாகவும் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்ததாக தெரிவித்த ஜேர்மனிய தம்பதி, தமிழ் கலாச்சாரம் மிகவும் அருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் 71 வயதில் உலகம் சுற்றும் வெளிநாட்டு தம்பதி குறித்த தகவல் பலரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.


உண்பது உறங்குவது எல்லாமே காரில்தான்; 71 வயதில் உலகம் சுற்றும் வெளிநாட்டு தம்பதி samugammedia ஜெர்மனியைச் சேர்ந்த ஹூல்ஸ்சர் என்பவர் மனைவி ஐரின் ருனேலர் உடன் வீட்டை போல் உருவாக்கிய உயர் ரக காரில் பல்வேறு நாடுகளில் வலம் வருகிறார்.பொதுவாகவே மேலை நாடவர்கள் குறிப்பிட்ட காலம் வரை உழைத்து பணம் சேர்த்த பின்னர் அதில் பெரும் தொகையை சுற்றுலா செல்வதற்காக செலவு செய்வார்கள். அப்படித்தான் இந்த ஜெர்மனி தம்பதியும் கடந்த 2018 ஆம் ஆண்டு தங்களது உலகப் பயணத்தை துவங்கி உள்ளனர்.ஜெர்மனியில் இருந்து பின்லாந்து, துருக்கி, ஈரான், கஜகஸ்தான், மங்கோலியா, சீனா என 20 நாடுகளை கடந்து தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளனர்.இவர்கள் செல்லும் இடங்களில் விடுதியில் தங்குவதில்லை. அவர்களது சொகுசு வாகனத்திலேயே றங்க, உணவு சமைக்க என அனைத்து வசதிகளும் . சுமார் 5 ஆண்டுகளாக அதே வாகனத்தில் தம்பதிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், ஜெர்மனி தம்பதி தற்போது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் வந்துள்ளனர். தஞ்சை பெரியகோயிலை சுற்றி பார்த்துவிட்டு அங்கு நடந்த கலை நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.இந்நிலையில் தமது சுற்றுப்பயணம் தொடர்பில் தம்பதிகள் கூறுகையில்,2018ல் தனது மனைவியுடன் தொடங்கி இந்த சுற்றுலா பயணம் சுமார் ஐந்து ஆண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், இதற்கு அடுத்ததாக இந்தோனேசியா ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாக தெரிவித்தார்.மேலும் இந்தியாவில் மூன்று மாதங்களாக தங்கி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வந்ததாக தெரிவித்த அவர், இந்தியா ஒரு நல்ல நாடு எனவும் கோடை காலம் என்பதால் மிகுந்த வெப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.தஞ்சை பெரிய கோயில் தங்களுக்கு வியப்பளிப்பதாக உள்ளதாகவும் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்ததாக தெரிவித்த ஜேர்மனிய தம்பதி, தமிழ் கலாச்சாரம் மிகவும் அருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.இந்நிலையில் 71 வயதில் உலகம் சுற்றும் வெளிநாட்டு தம்பதி குறித்த தகவல் பலரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement