• May 18 2024

பூனையின் மூலம் பரவும் புதிய நோய் - அச்சத்தில் பூனைப் பிரியர்கள்! SamugamMedia

Chithra / Mar 4th 2023, 2:13 pm
image

Advertisement

பிரித்தானியாவில் முதன்முறையாக கடுமையான வலியுடன் கூடிய கொப்புளங்களை உருவாக்கும் நோய் ஒன்று இனங்காணபட்டுள்ளது. 

இதற்குமுன்னதாக இவ்வாறான ஒரு நோய் தென் அமெரிக்காவுக்கு வெளியே வேறெங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 

Sporotrichosis brasiliensis என்று அழைக்கப்படும்  பூஞ்சைத் தொற்றானது  உடலின்மீது கொப்புளங்களையும் புண்களையும் உருவாக்கும்.  

இது முதற்கட்டமாக  பிரித்தானியாவில் மூன்று பேரிற்கு பூனையிடமிருந்து பரவும்  பூஞ்சை நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


பூனையின் உடலில் உருவாகும் இந்த நோய், பாதிக்கப்பட்ட பூனையின் கீறல், அல்லது பூனைக்கடி மூலம் மனிதர்களுக்கு பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரேசிலில் இந்தக்  கிருமி அதிகளவில் இருக்கும்  நிலையில், பிரேசிலிலிருந்து பிரித்தானியாவுக்குக் கொண்டு வரப்பட்ட பூனை ஒன்றை வைத்திருந்த  64 வயது பெண் , அவரது மகளான 30 வயது பெண் மற்றும் 20 வயதுகளிலிருக்கும் கால்நடை மருத்துவர் ஒருவர் ஆகிய மூவருக்கு ஒரு பூனையின் மூலம் இந்த நோய் பரவியுள்ளது. 

இந்த பூஞ்சைத் தொற்று பொதுவாக மிதமானதாக இருப்பினும், எலும்புகளையும் மூட்டுகளையும்  பாதிப்படைய செய்வதுடன் சிலருக்கு  நுரையீரல்கள் மற்றும் மைய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படக்கூடும் எனவும்  கூறப்பட்டுள்ளது.

பூனையின் மூலம் பரவும் புதிய நோய் - அச்சத்தில் பூனைப் பிரியர்கள் SamugamMedia பிரித்தானியாவில் முதன்முறையாக கடுமையான வலியுடன் கூடிய கொப்புளங்களை உருவாக்கும் நோய் ஒன்று இனங்காணபட்டுள்ளது. இதற்குமுன்னதாக இவ்வாறான ஒரு நோய் தென் அமெரிக்காவுக்கு வெளியே வேறெங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. Sporotrichosis brasiliensis என்று அழைக்கப்படும்  பூஞ்சைத் தொற்றானது  உடலின்மீது கொப்புளங்களையும் புண்களையும் உருவாக்கும்.  இது முதற்கட்டமாக  பிரித்தானியாவில் மூன்று பேரிற்கு பூனையிடமிருந்து பரவும்  பூஞ்சை நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.பூனையின் உடலில் உருவாகும் இந்த நோய், பாதிக்கப்பட்ட பூனையின் கீறல், அல்லது பூனைக்கடி மூலம் மனிதர்களுக்கு பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் இந்தக்  கிருமி அதிகளவில் இருக்கும்  நிலையில், பிரேசிலிலிருந்து பிரித்தானியாவுக்குக் கொண்டு வரப்பட்ட பூனை ஒன்றை வைத்திருந்த  64 வயது பெண் , அவரது மகளான 30 வயது பெண் மற்றும் 20 வயதுகளிலிருக்கும் கால்நடை மருத்துவர் ஒருவர் ஆகிய மூவருக்கு ஒரு பூனையின் மூலம் இந்த நோய் பரவியுள்ளது. இந்த பூஞ்சைத் தொற்று பொதுவாக மிதமானதாக இருப்பினும், எலும்புகளையும் மூட்டுகளையும்  பாதிப்படைய செய்வதுடன் சிலருக்கு  நுரையீரல்கள் மற்றும் மைய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படக்கூடும் எனவும்  கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement