• May 18 2024

யாழ்.போதனாவில் சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசி மருந்துகள் வழங்கிவைப்பு SamugamMedia

Chithra / Mar 4th 2023, 2:05 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசி மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டது.

கனடா நாட்டைச் சேர்ந்த நேயம் பவுண்டேஷனின் நிதி உதவியில் மருந்து பொருட்கள் இன்று சனிக்கிழமை(04) காலை 10 மணியளவில்  வழங்கி வைக்கப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் எஸ்.நித்தியானந்தா மற்றும் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர் எம்.அரவிந்தன் ஆகியோரிடம் யாழ் நீரிழிவு கழகத்தினரால் மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது யாழ் நீரிழிவு கழகத்தின் தலைவர் தி.மைக்கல், யாழ் நீரிழிவு கழகத்தின் செயலாளர் க.கணபதி ஆகியோர் மருந்து பொருட்களை கையளித்தனர்.

நீரிழிவு நோய் வகை ஒன்றிற்கான சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசி மருந்து தட்டுப்பாடாக இருப்பதை போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ் நீரிழிவு கழகத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நாடு இக்கட்டான சூழலில் உள்ள காரணத்தினால் யாழ்போதன வைத்தியசாலையினால் வழங்க முடியாது போன இன்சுலின்கள் கனடாவின் நேயம் பவுண்டேசனால் வழங்கப்பட்ட  நிதியுதவியினால் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் நீரிழிவு கழகத்தின் தலைவர் மைக்கல் தெரிவித்துள்ளார். 

இன்று சமூகம் ஊடகத்தினருக்கு வழங்கிய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், 

மருந்து தட்டுப்பாடு மோசமாக உள்ள சூழலில் யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் 100 க்கும் அதிகமான சிறார்களிற்கு இன்சுலின் வழங்க முடியாதுள்ளது.  

அந்த நிலைமையினை,  யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரியப்படுத்தியமையால், கனடா வாழ் நேயம் பவுண்டேசன் ஸ்தாபனத்தினருக்கு அறிவித்திற்கினங்க அவர்கள் உடனடியாக 5 லட்சம் ரூபாயினை நிதியுதவியாக வழங்கினார்கள். 

அந்த நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட இன்சுலின் ஊசிகள் 04.03.2023 ஆகிய இன்று  யாழ்போதன வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதனை வழங்கிய நேயம் பவுண்டேசனிற்கு நன்றிகளினை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


யாழ்.போதனாவில் சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசி மருந்துகள் வழங்கிவைப்பு SamugamMedia யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசி மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டது.கனடா நாட்டைச் சேர்ந்த நேயம் பவுண்டேஷனின் நிதி உதவியில் மருந்து பொருட்கள் இன்று சனிக்கிழமை(04) காலை 10 மணியளவில்  வழங்கி வைக்கப்பட்டது.யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் எஸ்.நித்தியானந்தா மற்றும் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர் எம்.அரவிந்தன் ஆகியோரிடம் யாழ் நீரிழிவு கழகத்தினரால் மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.இதன்போது யாழ் நீரிழிவு கழகத்தின் தலைவர் தி.மைக்கல், யாழ் நீரிழிவு கழகத்தின் செயலாளர் க.கணபதி ஆகியோர் மருந்து பொருட்களை கையளித்தனர்.நீரிழிவு நோய் வகை ஒன்றிற்கான சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசி மருந்து தட்டுப்பாடாக இருப்பதை போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ் நீரிழிவு கழகத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.நாடு இக்கட்டான சூழலில் உள்ள காரணத்தினால் யாழ்போதன வைத்தியசாலையினால் வழங்க முடியாது போன இன்சுலின்கள் கனடாவின் நேயம் பவுண்டேசனால் வழங்கப்பட்ட  நிதியுதவியினால் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் நீரிழிவு கழகத்தின் தலைவர் மைக்கல் தெரிவித்துள்ளார். இன்று சமூகம் ஊடகத்தினருக்கு வழங்கிய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் குறிப்பிடுகையில், மருந்து தட்டுப்பாடு மோசமாக உள்ள சூழலில் யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் 100 க்கும் அதிகமான சிறார்களிற்கு இன்சுலின் வழங்க முடியாதுள்ளது.  அந்த நிலைமையினை,  யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரியப்படுத்தியமையால், கனடா வாழ் நேயம் பவுண்டேசன் ஸ்தாபனத்தினருக்கு அறிவித்திற்கினங்க அவர்கள் உடனடியாக 5 லட்சம் ரூபாயினை நிதியுதவியாக வழங்கினார்கள். அந்த நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட இன்சுலின் ஊசிகள் 04.03.2023 ஆகிய இன்று  யாழ்போதன வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை வழங்கிய நேயம் பவுண்டேசனிற்கு நன்றிகளினை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement