• May 19 2024

மீனவர் ஒருவர் பிடித்த சுறாவின் வயிற்றில் கண்ட அதிரவைத்த காட்சி...!SamugamMedia

Tamil nila / Feb 28th 2023, 4:00 pm
image

Advertisement

அர்ஜெண்டினாவில், மர்மமான முறையில் மாயமான ஒருவரின் உடல் பாகங்கள், சுறா ஒன்றின் வயிற்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.


Virginia Brugger என்uம் பெண், இம்மாதம் 18ம் திகதி, கடற்கரைக்குச் சென்ற தன் கணவரான Diego Alejandro Barria (35)ஐக் காணாததால் பொலிஸாரிடம் புகாரளித்துள்ளார்.பொலிஸார் Diegoவின் நான்கு சக்கர வாகனத்தையும் ஹெல்மெட்டையும் கடற்கரை ஒன்றில் இரண்டு நாட்களுக்குப் பின் கண்டுபிடித்தனர்.



எட்டு நாட்களாகியும் கணவனைக் காணாமல் Virginia கவலையடைந்திருந்த நேரத்தில் அவருக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தி கிடைத்தது.அதாவது மீனவர்கள் தாங்கள் பிடித்த சுறா ஒன்றை சுத்தம் செய்யும்போது, அதன் வயிற்றுக்குள் மனித உடல் பாகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.


உடனடியாக அவர்கள் பொலிஸாருக்கு தகவலளிக்க, அவர்களுடன் வந்த Virginia, அந்த மீனின் வயிற்றுக்குள் இருந்த கையில் குத்தப்பட்டிருந்த வித்தியாசமான டாட்டூவை வைத்து, அது தன் கணவருடைய உடல்தான் என்பதை உறுதி செய்தார்.


காணாமல் போன கணவனை மீனின் வயிற்றுக்குள் கண்டுபிடிக்கும் நிலை ஏற்பட்டதால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார் Virginia. இந்த சம்பவம் அவரது குடும்பத்தாரிடையே கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.


மீனவர் ஒருவர் பிடித்த சுறாவின் வயிற்றில் கண்ட அதிரவைத்த காட்சி.SamugamMedia அர்ஜெண்டினாவில், மர்மமான முறையில் மாயமான ஒருவரின் உடல் பாகங்கள், சுறா ஒன்றின் வயிற்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.Virginia Brugger என்uம் பெண், இம்மாதம் 18ம் திகதி, கடற்கரைக்குச் சென்ற தன் கணவரான Diego Alejandro Barria (35)ஐக் காணாததால் பொலிஸாரிடம் புகாரளித்துள்ளார்.பொலிஸார் Diegoவின் நான்கு சக்கர வாகனத்தையும் ஹெல்மெட்டையும் கடற்கரை ஒன்றில் இரண்டு நாட்களுக்குப் பின் கண்டுபிடித்தனர்.எட்டு நாட்களாகியும் கணவனைக் காணாமல் Virginia கவலையடைந்திருந்த நேரத்தில் அவருக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தி கிடைத்தது.அதாவது மீனவர்கள் தாங்கள் பிடித்த சுறா ஒன்றை சுத்தம் செய்யும்போது, அதன் வயிற்றுக்குள் மனித உடல் பாகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.உடனடியாக அவர்கள் பொலிஸாருக்கு தகவலளிக்க, அவர்களுடன் வந்த Virginia, அந்த மீனின் வயிற்றுக்குள் இருந்த கையில் குத்தப்பட்டிருந்த வித்தியாசமான டாட்டூவை வைத்து, அது தன் கணவருடைய உடல்தான் என்பதை உறுதி செய்தார்.காணாமல் போன கணவனை மீனின் வயிற்றுக்குள் கண்டுபிடிக்கும் நிலை ஏற்பட்டதால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார் Virginia. இந்த சம்பவம் அவரது குடும்பத்தாரிடையே கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement