Coalion for Incisive Impact அமைப்பின் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் இளையோர் இடையே கேள்வி பதில் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்றையதினம்(27) இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன், செல்வராஜா கஜேந்திரன், எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி உமாச் சந்திரா பிரகாஷ், வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் அரசியல் பிரதிநிதிகளாக கலந்துகொண்டதுடன் இளைஞர், யுவதிகள், மாற்றுப் பாலினத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது அரசியல் தரப்பினரிடம் இளைஞர்,யுவதிகள் பல்வேறு வினாக்களை எழுப்பியதுடன் அதற்குரிய பதில்களை அரசியல் தரப்பினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள்-இளையோர் இடையே இடம்பெற்ற விசேட கேள்வி பதில் நிகழ்வு Coalion for Incisive Impact அமைப்பின் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் இளையோர் இடையே கேள்வி பதில் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்றையதினம்(27) இடம்பெற்றது.பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன், செல்வராஜா கஜேந்திரன், எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி உமாச் சந்திரா பிரகாஷ், வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் அரசியல் பிரதிநிதிகளாக கலந்துகொண்டதுடன் இளைஞர், யுவதிகள், மாற்றுப் பாலினத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.இதன்போது அரசியல் தரப்பினரிடம் இளைஞர்,யுவதிகள் பல்வேறு வினாக்களை எழுப்பியதுடன் அதற்குரிய பதில்களை அரசியல் தரப்பினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.