• Jan 09 2026

அதிவேகமாக வந்த கார் மோதி சிறுவன் பரிதாபமாகப் பலி!

Chithra / Jan 8th 2026, 7:57 am
image


குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.


இந்தத் துயரச் சம்பவம்  நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.  


மேற்படி சிறுவன் சைக்கிளில் வீதியைக் கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதியுள்ளது.


விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் உடனே கல்கமுவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தாலும் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையை முன்னெடுத்த பொலிஸார், 

காரின் சாரதியான 27 வயது இளைஞரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிவேகமாக வந்த கார் மோதி சிறுவன் பரிதாபமாகப் பலி குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இந்தத் துயரச் சம்பவம்  நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.  மேற்படி சிறுவன் சைக்கிளில் வீதியைக் கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதியுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் உடனே கல்கமுவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தாலும் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையை முன்னெடுத்த பொலிஸார், காரின் சாரதியான 27 வயது இளைஞரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement