• Mar 10 2025

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

Chithra / Mar 10th 2025, 7:15 am
image

மாதம்பே பகுதியில் சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி பேருந்து மற்றும் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.


இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தலவில தேவஸ்தானத்திற்குச் சென்று மீண்டும் வந்துக்கொண்டிருந்த போதே, முச்சக்கர வண்டி இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

மீன்களை ஏற்றிச் சென்ற லொறியுடனும், பின்னர் பேருந்து ஒன்றுடனும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

விபத்துக்குப் பிறகு பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்துடன் தொடர்புடைய மீன் லொறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி மாதம்பே பகுதியில் சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி பேருந்து மற்றும் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,தலவில தேவஸ்தானத்திற்குச் சென்று மீண்டும் வந்துக்கொண்டிருந்த போதே, முச்சக்கர வண்டி இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.மீன்களை ஏற்றிச் சென்ற லொறியுடனும், பின்னர் பேருந்து ஒன்றுடனும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.விபத்துக்குப் பிறகு பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்துடன் தொடர்புடைய மீன் லொறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement