• May 21 2024

ஆலயத்திற்கு மேல் குடைசாய்ந்த மரம்..! யாழ்ப்பாணத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் பாதிப்பு..! samugammedia

Chithra / Nov 14th 2023, 3:16 pm
image

Advertisement


தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் இதுவரை யாழ்ப்பாணத்தில் 8 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/388 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை அதே பிரதேச செயலர் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழையினால் 7 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இதுவரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் மொத்தமாக யாழ்ப்பாணத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் 43.1 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், 2023ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 897.7 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாக அவர்  தெரிவித்தார்.

இதேவேளை வலிகாமம் மேற்கு, சங்கானை - வட்டு மேற்கில் (ஜே/167) பாரிய அரசமரம் ஒன்று நேற்றிரவு தொடர்ந்து பெய்த மழையால் குடைசாய்ந்து விழுந்துள்ளது.

இப்பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்துக்கு அருகில் இருந்த மரமே இவ்வாறு விழுந்துள்ளது. 

இதனால் ஆலயத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.


ஆலயத்திற்கு மேல் குடைசாய்ந்த மரம். யாழ்ப்பாணத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் பாதிப்பு. samugammedia தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் இதுவரை யாழ்ப்பாணத்தில் 8 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/388 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை அதே பிரதேச செயலர் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழையினால் 7 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அந்தவகையில் இதுவரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் மொத்தமாக யாழ்ப்பாணத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் 43.1 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், 2023ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 897.7 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாக அவர்  தெரிவித்தார்.இதேவேளை வலிகாமம் மேற்கு, சங்கானை - வட்டு மேற்கில் (ஜே/167) பாரிய அரசமரம் ஒன்று நேற்றிரவு தொடர்ந்து பெய்த மழையால் குடைசாய்ந்து விழுந்துள்ளது.இப்பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்துக்கு அருகில் இருந்த மரமே இவ்வாறு விழுந்துள்ளது. இதனால் ஆலயத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement