• May 10 2024

அரச உத்தியோகத்தர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் காலம் குறித்து அறிவிப்பு..! samugammedia

Chithra / Nov 14th 2023, 3:05 pm
image

Advertisement

 

வரவு - செலவு திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா வாழ்வாதார கொடுப்பனவு எதிர்வரும் 2024 ஏப்ரல் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான கொடுப்பனவு ஒக்டோபரிலிருந்து 6 மாத காலத்துக்குள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்வடாறு  தெரிவித்தார்.

பாரிய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளார் என்பதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதியிடம் வரவு செலவு திட்டத்தை புகழ்ந்து விட்டு குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மக்கள் மத்தியில் வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பது முறையற்றது.

நாடு தற்போது பொருளாதார நெருக்கடி உள்ளதே தவிர அரசியல் நெருக்கடி இல்லை என்பதை எதிர்க்கட்சிகள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடந்த ஒருவருட காலமாக அரசியல் நோக்கமில்லாமல் தீர்மானங்கள் எடுத்ததால் நாடு சற்றேனும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. சகல தரப்பினராலும் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்ற முடியாது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிலையான பொருளாதார கொள்கை என்பதை இலக்காக கொண்டுள்ளது.  என குறிப்பிட்டுள்ளார்.   

அரச சேவையாளர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்தும் நோக்கம் ஏதும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.   



அரச உத்தியோகத்தர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் காலம் குறித்து அறிவிப்பு. samugammedia  வரவு - செலவு திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா வாழ்வாதார கொடுப்பனவு எதிர்வரும் 2024 ஏப்ரல் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.அத்துடன் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான கொடுப்பனவு ஒக்டோபரிலிருந்து 6 மாத காலத்துக்குள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்வடாறு  தெரிவித்தார்.பாரிய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளார் என்பதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஜனாதிபதியிடம் வரவு செலவு திட்டத்தை புகழ்ந்து விட்டு குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மக்கள் மத்தியில் வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பது முறையற்றது.நாடு தற்போது பொருளாதார நெருக்கடி உள்ளதே தவிர அரசியல் நெருக்கடி இல்லை என்பதை எதிர்க்கட்சிகள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.கடந்த ஒருவருட காலமாக அரசியல் நோக்கமில்லாமல் தீர்மானங்கள் எடுத்ததால் நாடு சற்றேனும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. சகல தரப்பினராலும் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்ற முடியாது.2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிலையான பொருளாதார கொள்கை என்பதை இலக்காக கொண்டுள்ளது.  என குறிப்பிட்டுள்ளார்.   அரச சேவையாளர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்தும் நோக்கம் ஏதும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.   

Advertisement

Advertisement

Advertisement