இந்தியாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் இமயமலை பகுதிகளில் சமீப நாள்களாக திடீர் கனமழை வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாஷி மாவட்டத்தில் திடீர் மேக வெடிப்பு ஏற்பட்டது.
இந்த மேகவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள தாராலி என்ற கிராமமே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கியது.
வீடுகள், கடைகள், உணவகங்கள் என அனைத்து கட்டடங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், பலர் மாயமாகியுள்ளனர்.
இதுவரை நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் மீட்கப்பட்டநிலையில், 60க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகி இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
காயமடைந்தவர்களுக்கு ஹர்ஷில் உள்ள இந்திய ராணுவ மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பதறவைக்கும் நிகழ்வின் காட்சிகள் சமூக வலைத்தளங்கள், இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் பெரும் துயரத்தை தருவதாக தெரிவித்த உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் தாமி, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மும்முரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
நிலவரம் குறித்து கவனமாக கண்காணித்து வருவதாகவும், அரசு நிர்வாகம் மக்களுக்கு அனைத்து வகையிலும் தேவையான உதவிகளை மேற்கொள்ளும் என உறுதி அளித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இந்திய வானிலை மையம் ஏற்கனவே கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரகாண்டை போலவே இமாச்சலப் பிரதேச மாநிலத்திலும் கடந்த சில நாள்களாக தீவிர கனமழை வெள்ளப்பெருக்கு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கிய பேரவலம்; பதறவைக்கும் காட்சி இந்தியாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் இமயமலை பகுதிகளில் சமீப நாள்களாக திடீர் கனமழை வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாஷி மாவட்டத்தில் திடீர் மேக வெடிப்பு ஏற்பட்டது.இந்த மேகவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள தாராலி என்ற கிராமமே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கியது. வீடுகள், கடைகள், உணவகங்கள் என அனைத்து கட்டடங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், பலர் மாயமாகியுள்ளனர். இதுவரை நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் மீட்கப்பட்டநிலையில், 60க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகி இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.காயமடைந்தவர்களுக்கு ஹர்ஷில் உள்ள இந்திய ராணுவ மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த பதறவைக்கும் நிகழ்வின் காட்சிகள் சமூக வலைத்தளங்கள், இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.இந்த சம்பவம் பெரும் துயரத்தை தருவதாக தெரிவித்த உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் தாமி, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மும்முரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.நிலவரம் குறித்து கவனமாக கண்காணித்து வருவதாகவும், அரசு நிர்வாகம் மக்களுக்கு அனைத்து வகையிலும் தேவையான உதவிகளை மேற்கொள்ளும் என உறுதி அளித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இந்திய வானிலை மையம் ஏற்கனவே கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.உத்தரகாண்டை போலவே இமாச்சலப் பிரதேச மாநிலத்திலும் கடந்த சில நாள்களாக தீவிர கனமழை வெள்ளப்பெருக்கு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.