• May 19 2024

அடாவடி அரசியலைக் கைவிட்டு இயல்பு நிலைக்கு வாருங்கள் - சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளுக்கு சுரேஷ் எடுத்துரைப்பு samugammedia

Chithra / Jul 19th 2023, 9:30 am
image

Advertisement

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் அண்மைய நாடாளுமன்ற உரை இலங்கை நீதித்துறை சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளினால் செல்வாக்கு செலுத்தப்படுகின்றதா என்கிற தமிழ் மக்களின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்திற்கு பதிலளிக்கும் முகமாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

குருந்தூர்மலை விகாரையிலிருந்து எம்மை வெளியேறுமாறு உத்தரவிடும் அதிகாரம் முல்லைத்தீவு தமிழ் நீதிபதிக்குக் கிடையாது. குருந்தூர்மலை விகாரையின் தொல்பொருள் மரபுரிமை தொடர்பில் கேள்வி எழுப்பும் அதிகாரமும் இந்த தமிழ் நீதிபதிக்கு கிடையாது. அத்துடன் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை இந்த தமிழ் நீதிபதி மறந்துவிடக்கூடாது என்று அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் கடற்படையின் முன்னாள் ரியர் அட்மிரலுமான சரத் வீரசேகர 07.07.2023 வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலை என்பது புராதான பௌத்த சின்னங்களைக் கொண்ட இடமாக தொல்பொருள் திணைக்களம் பிரகடனப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் சைவ வழிபாட்டிடங்களாகத் திகழந்த இடங்கள் சிலவேளைகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் பௌத்தர்கள் வழிபட்ட இடங்களாக இருந்திருக்கலாம். வடக்கு-கிழக்கில் தமிழ் பௌத்தம் அழிவடைந்து மீண்டும் சைவம் தழைத்தோங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன. அவ்வாறான இடங்களில் பல நூற்றாண்டுகளாக சிவ வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இத்தகைய புராதான சின்னங்கள் உள்ள இடங்களைப் பாதுகாப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமே. புராதானச் சின்னங்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் அத்தகைய இடங்களில் புதிய பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதும் அதனைச் சுற்றியுள்ள காணிகளைக் கபளீகரம் செய்வதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைகளை மீறி, பௌத்த பிக்குகளும் தொல்பொருள் திணைக்களமும், இராணுவத்தினரும் இணைந்து புதிய புத்த விகாரை ஒன்றை கட்ட ஆரம்பித்தார்கள். 

அந்த விடயம் மீண்டும் நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டபொழுது, நீதிபதி அவர்கள், தொல்லியல் திணைக்களம், சட்டமா அதிபரின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நிலைமைகளை நேரடியாக அவதானிப்பதற்காக சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர். மிக மோசமான சிங்கள பௌத்த இனவாதியான சரத் வீரசேகர அவர்களும் சில பௌத்த பிக்குகளுடன் அழையா விருந்தாளியாக அங்கு சென்றிருந்தார்கள். 

அவர் நீதிபதியின்மீது செல்வாக்கு செலுத்த முயற்சித்த நேரத்தில், நீதித்துறை விடயங்களில் தலையிட வேண்டாம் என அவரையும் பௌத்த பிக்குகளையும் அங்கிருந்து வெளியேறும்படி நீதிபதி உத்தரவிட்டார். இவற்றைச் சகித்துக்கொள்ள முடியாத  சரத் வீரசேகர அவர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றபொழுது, முல்லைத்தீவு நீதிபதியின் நடவடிக்கைகளை காரசாரமாகக் கண்டித்தது மாத்திரமல்லாமல், அவர் தமிழ் நீதிபதியாக இருப்பதால் தமிழர்களுக்குச் சாதகமாக இருக்கிறார் என்ற கருத்தினையும் தெரிவித்திருந்தார்.

இந்த அரஜாகமான செயலை இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் கண்டித்திருப்பதுடன், நீதித்துறையில் இத்தகைய அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது எனவும் கூறியிருந்தனர். நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பாவித்து சரத்வீரசேகர கூறிய கருத்துகள் நீதித்துறையை இனரீதியாகப் பிளவுபடுத்தும் ஒரு முயற்சியாக அமைந்திருக்கிறதா என்று எண்ணத்தோன்றுகின்றது.

இலங்கை நீதித்துறை என்பது நீண்டகாலமாக மிகப்பெருமளவில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட பல்வேறுபட்ட தாக்குதல்கள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு இலங்கை நீதித்துறையால் நீதி கிடைக்கவில்லை. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்களையும் கிடைத்தற்கரிய ஓலைச்சுவடிகளையும் விலைமதிப்பற்ற கையெழுத்துப் பிரதிகளையும் கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறுபட்ட நிர்வாகிகளும் இதில் சம்பந்தப்பட்டிருந்தும்கூட யாரும் நீதித்துறையால் தண்டிக்கப்படவில்லை.  அதேபோல, தமிழர்களுக்கு எதிராக தென்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 1956, 1958, 1977 மற்றும் 1983 தாக்குதல்களில் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில்; கொலைசெய்யப்பட்டதுடன் அவர்களின் பல்லாயிரக்கணக்கான கோடிரூபாய் சொத்துகள் அழிக்கப்பட்ட நிலையிலும் பெயருக்காகக்கூட ஒருவரும் தண்டிக்கப்படவில்லை.

வடக்கு-கிழக்கின் பல பகுதிகளில் முப்படைகளால் பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றன. நெடுந்தீவிலிருந்து வந்த குமுதினிப் படகில் பயணித்த அனைவரும் கடற்படையினரால் வெட்டியும் சுட்டும் கொலை செய்யப்பட்டார்கள். மன்னாரிலும் படுகாலைகள் இடம்பெற்றிருந்தன. திருகோணமலை மாவட்டம், மூதூரில் குமாரபுரம், அம்பாறையில் தங்கவேலாயுதரபுரம், மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை, வந்தாறுமூலை என பல்வேறு இடங்களில் இடம்பெற்ற படுகொலைகளில் அந்த மக்களுக்கான எத்தகைய நீதியும் இன்றுவரை வழங்கப்படவில்லை. மூதூர் குமாரபுரம் கொலைவழக்கு திருகோணமலை நீதிமன்றத்தில் நடந்த பொழுது, கொலைச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினர் தமக்கு திருகோணமலை வருவது பாதுகாப்பில்லை என்று கூறியதன் பேரில் அந்த வழக்கு அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு பின்னர் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஜூரிகள் சபையினரால் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், மூதூரில் பிரான்ஸ் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய பதினெட்டுபேர் கொல்லப்பட்டபொழுதும், திருகோணமலை நகரத்தில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டபோதும் கொழும்பில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட பதினொரு இளைஞர்கள் கொல்லப்பட்டபோதும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை இலங்கை நீதித்துறையால் பெற்றுக்கொடுக்க முடியாமற்போயுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில், இலங்கையின் நீதித்துறையின்மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியுமா என்ற பாரிய கேள்வி எழுகிறது.

உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமைநீதிபதி சரத் என். சில்வா அவர்கள் ஓய்வு பெற்றதன் பின்னர், தான் எத்தகைய அரசியல் தீர்ப்புகளை வழங்கினேன் என்று குறிப்பிட்டவற்றைப் பார்க்கின்றபொழுது, இலங்கை நீதித்துறையானது எவ்வளவு தூரம் சீர்கெட்டிருக்கிறது என்பதை அறியக்கூடியதாக இருந்தது. சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கா அவர்களது பதவிக்கால எல்லை பூர்த்தி அடைவதற்கு ஒருவருடம் இருந்தபொழுது, அவரது பதவிக்காலம் முடிந்துவிட்டது என தீர்ப்பு வழங்கி, மகிந்தராஜபக்ச அவர்களை ஜனாதிபதியாக்குவதற்கு தான் உதவியதாக அவரே ஒப்புக்கொண்டிருக்கின்றார்.

ஆகவே, இலங்கையின் உயர்நீதிமன்றத்திலிருந்து நீதவான் நீதிமன்றம் வரை அரசியல்மயப்படுத்தப்பட்டதாகவே தோன்றுகின்றது. இதனை மாற்றி இலங்கை நீதித்துறையை சுதந்திரமாக இயங்கவிடுவதென்பதற்குப் பதிலாக நீதித்துறையிலிருக்கும் தமிழ் நீதிபதிகளை மிரட்டும் பாணியில் பேசுவதும் அதனை நீதியமைச்சும் பாராளுமன்றமும் பார்த்துக்கொண்டிருப்பதும் ஜனாதிபதி அதனைக் கண்டும் காணாமல் இருப்பதும் இலங்கை நீதித்துறையை சவாலுக்குட்படுத்தும் செயலாகும். இவ்வாறான ஒரு நீதித்துறையிடமிருந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதற்காகவே யுத்தக்குற்றங்கள் தொடர்பாகவும் இன அழிப்பு தொடர்பாகவும் தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையைக் கோரிநிற்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சிங்கள பௌத்த இனவாத சக்திகள் நீதித்துறையானது எப்பொழுதும் தமக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றன. குருந்தூர்மலையில் நீதிமன்றம் ஏற்படுத்திக்கொடுத்த வழிகாட்டுதல்களை ஏற்க மறுத்து தாம் விரும்பியவாறு அங்கு புதிய விகாரையைக் கட்டியதன் மூலம் நீதிபதியின் ஆணையை மீறியது மாத்திரமல்லாமல், அதனை நேரடியாகப் பார்க்கச் சென்ற நீதிபதியையே அச்சுறுத்தும் தோரணையில் பேசுவதும் நீதிபதியின்மீதே குற்றம் சுமத்துவதும் சகல நீதிபதிகளும் நீதித்துறையும் தாம் விரும்பியவற்றையே செய்ய வேண்டும் என்று சிங்கள பௌத்த இனவாத சக்திகளின் எதிர்பார்ப்பை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. இது சுதந்திரமான நீதித்துறைக்கும் உகந்ததல்ல. பல்லின மக்கள் வாழும் நாட்டில் இவை முற்றுமுழுதாக மாற்றப்பட்டு ஒரு புதிய நீதிகலாசாரமும், அனைத்து மக்களும் ஏற்கக்கூடிய புதிய நீதித்துறையும் உருவாக்கப்படவேண்டும். இதற்கு முதற்படியாக ஆட்சியில் மதக்கலப்புகள் அகற்றப்பட்டு, இனவாதத் தன்மைகள் களையப்பட்டு ஒரு புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்படவேண்டும்.

அடாவடி அரசியலைக் கைவிட்டு இயல்பு நிலைக்கு வாருங்கள் - சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளுக்கு சுரேஷ் எடுத்துரைப்பு samugammedia நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் அண்மைய நாடாளுமன்ற உரை இலங்கை நீதித்துறை சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளினால் செல்வாக்கு செலுத்தப்படுகின்றதா என்கிற தமிழ் மக்களின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்திற்கு பதிலளிக்கும் முகமாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு:குருந்தூர்மலை விகாரையிலிருந்து எம்மை வெளியேறுமாறு உத்தரவிடும் அதிகாரம் முல்லைத்தீவு தமிழ் நீதிபதிக்குக் கிடையாது. குருந்தூர்மலை விகாரையின் தொல்பொருள் மரபுரிமை தொடர்பில் கேள்வி எழுப்பும் அதிகாரமும் இந்த தமிழ் நீதிபதிக்கு கிடையாது. அத்துடன் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை இந்த தமிழ் நீதிபதி மறந்துவிடக்கூடாது என்று அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் கடற்படையின் முன்னாள் ரியர் அட்மிரலுமான சரத் வீரசேகர 07.07.2023 வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.குருந்தூர்மலை என்பது புராதான பௌத்த சின்னங்களைக் கொண்ட இடமாக தொல்பொருள் திணைக்களம் பிரகடனப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் சைவ வழிபாட்டிடங்களாகத் திகழந்த இடங்கள் சிலவேளைகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் பௌத்தர்கள் வழிபட்ட இடங்களாக இருந்திருக்கலாம். வடக்கு-கிழக்கில் தமிழ் பௌத்தம் அழிவடைந்து மீண்டும் சைவம் தழைத்தோங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன. அவ்வாறான இடங்களில் பல நூற்றாண்டுகளாக சிவ வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய புராதான சின்னங்கள் உள்ள இடங்களைப் பாதுகாப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமே. புராதானச் சின்னங்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் அத்தகைய இடங்களில் புதிய பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதும் அதனைச் சுற்றியுள்ள காணிகளைக் கபளீகரம் செய்வதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைகளை மீறி, பௌத்த பிக்குகளும் தொல்பொருள் திணைக்களமும், இராணுவத்தினரும் இணைந்து புதிய புத்த விகாரை ஒன்றை கட்ட ஆரம்பித்தார்கள். அந்த விடயம் மீண்டும் நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டபொழுது, நீதிபதி அவர்கள், தொல்லியல் திணைக்களம், சட்டமா அதிபரின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நிலைமைகளை நேரடியாக அவதானிப்பதற்காக சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர். மிக மோசமான சிங்கள பௌத்த இனவாதியான சரத் வீரசேகர அவர்களும் சில பௌத்த பிக்குகளுடன் அழையா விருந்தாளியாக அங்கு சென்றிருந்தார்கள். அவர் நீதிபதியின்மீது செல்வாக்கு செலுத்த முயற்சித்த நேரத்தில், நீதித்துறை விடயங்களில் தலையிட வேண்டாம் என அவரையும் பௌத்த பிக்குகளையும் அங்கிருந்து வெளியேறும்படி நீதிபதி உத்தரவிட்டார். இவற்றைச் சகித்துக்கொள்ள முடியாத  சரத் வீரசேகர அவர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றபொழுது, முல்லைத்தீவு நீதிபதியின் நடவடிக்கைகளை காரசாரமாகக் கண்டித்தது மாத்திரமல்லாமல், அவர் தமிழ் நீதிபதியாக இருப்பதால் தமிழர்களுக்குச் சாதகமாக இருக்கிறார் என்ற கருத்தினையும் தெரிவித்திருந்தார்.இந்த அரஜாகமான செயலை இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் கண்டித்திருப்பதுடன், நீதித்துறையில் இத்தகைய அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது எனவும் கூறியிருந்தனர். நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பாவித்து சரத்வீரசேகர கூறிய கருத்துகள் நீதித்துறையை இனரீதியாகப் பிளவுபடுத்தும் ஒரு முயற்சியாக அமைந்திருக்கிறதா என்று எண்ணத்தோன்றுகின்றது.இலங்கை நீதித்துறை என்பது நீண்டகாலமாக மிகப்பெருமளவில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட பல்வேறுபட்ட தாக்குதல்கள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு இலங்கை நீதித்துறையால் நீதி கிடைக்கவில்லை. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்களையும் கிடைத்தற்கரிய ஓலைச்சுவடிகளையும் விலைமதிப்பற்ற கையெழுத்துப் பிரதிகளையும் கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறுபட்ட நிர்வாகிகளும் இதில் சம்பந்தப்பட்டிருந்தும்கூட யாரும் நீதித்துறையால் தண்டிக்கப்படவில்லை.  அதேபோல, தமிழர்களுக்கு எதிராக தென்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 1956, 1958, 1977 மற்றும் 1983 தாக்குதல்களில் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில்; கொலைசெய்யப்பட்டதுடன் அவர்களின் பல்லாயிரக்கணக்கான கோடிரூபாய் சொத்துகள் அழிக்கப்பட்ட நிலையிலும் பெயருக்காகக்கூட ஒருவரும் தண்டிக்கப்படவில்லை.வடக்கு-கிழக்கின் பல பகுதிகளில் முப்படைகளால் பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றன. நெடுந்தீவிலிருந்து வந்த குமுதினிப் படகில் பயணித்த அனைவரும் கடற்படையினரால் வெட்டியும் சுட்டும் கொலை செய்யப்பட்டார்கள். மன்னாரிலும் படுகாலைகள் இடம்பெற்றிருந்தன. திருகோணமலை மாவட்டம், மூதூரில் குமாரபுரம், அம்பாறையில் தங்கவேலாயுதரபுரம், மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை, வந்தாறுமூலை என பல்வேறு இடங்களில் இடம்பெற்ற படுகொலைகளில் அந்த மக்களுக்கான எத்தகைய நீதியும் இன்றுவரை வழங்கப்படவில்லை. மூதூர் குமாரபுரம் கொலைவழக்கு திருகோணமலை நீதிமன்றத்தில் நடந்த பொழுது, கொலைச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினர் தமக்கு திருகோணமலை வருவது பாதுகாப்பில்லை என்று கூறியதன் பேரில் அந்த வழக்கு அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு பின்னர் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஜூரிகள் சபையினரால் விடுவிக்கப்பட்டனர்.மேலும், மூதூரில் பிரான்ஸ் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய பதினெட்டுபேர் கொல்லப்பட்டபொழுதும், திருகோணமலை நகரத்தில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டபோதும் கொழும்பில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட பதினொரு இளைஞர்கள் கொல்லப்பட்டபோதும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை இலங்கை நீதித்துறையால் பெற்றுக்கொடுக்க முடியாமற்போயுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில், இலங்கையின் நீதித்துறையின்மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியுமா என்ற பாரிய கேள்வி எழுகிறது.உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமைநீதிபதி சரத் என். சில்வா அவர்கள் ஓய்வு பெற்றதன் பின்னர், தான் எத்தகைய அரசியல் தீர்ப்புகளை வழங்கினேன் என்று குறிப்பிட்டவற்றைப் பார்க்கின்றபொழுது, இலங்கை நீதித்துறையானது எவ்வளவு தூரம் சீர்கெட்டிருக்கிறது என்பதை அறியக்கூடியதாக இருந்தது. சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கா அவர்களது பதவிக்கால எல்லை பூர்த்தி அடைவதற்கு ஒருவருடம் இருந்தபொழுது, அவரது பதவிக்காலம் முடிந்துவிட்டது என தீர்ப்பு வழங்கி, மகிந்தராஜபக்ச அவர்களை ஜனாதிபதியாக்குவதற்கு தான் உதவியதாக அவரே ஒப்புக்கொண்டிருக்கின்றார்.ஆகவே, இலங்கையின் உயர்நீதிமன்றத்திலிருந்து நீதவான் நீதிமன்றம் வரை அரசியல்மயப்படுத்தப்பட்டதாகவே தோன்றுகின்றது. இதனை மாற்றி இலங்கை நீதித்துறையை சுதந்திரமாக இயங்கவிடுவதென்பதற்குப் பதிலாக நீதித்துறையிலிருக்கும் தமிழ் நீதிபதிகளை மிரட்டும் பாணியில் பேசுவதும் அதனை நீதியமைச்சும் பாராளுமன்றமும் பார்த்துக்கொண்டிருப்பதும் ஜனாதிபதி அதனைக் கண்டும் காணாமல் இருப்பதும் இலங்கை நீதித்துறையை சவாலுக்குட்படுத்தும் செயலாகும். இவ்வாறான ஒரு நீதித்துறையிடமிருந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதற்காகவே யுத்தக்குற்றங்கள் தொடர்பாகவும் இன அழிப்பு தொடர்பாகவும் தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையைக் கோரிநிற்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.இலங்கையின் சிங்கள பௌத்த இனவாத சக்திகள் நீதித்துறையானது எப்பொழுதும் தமக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றன. குருந்தூர்மலையில் நீதிமன்றம் ஏற்படுத்திக்கொடுத்த வழிகாட்டுதல்களை ஏற்க மறுத்து தாம் விரும்பியவாறு அங்கு புதிய விகாரையைக் கட்டியதன் மூலம் நீதிபதியின் ஆணையை மீறியது மாத்திரமல்லாமல், அதனை நேரடியாகப் பார்க்கச் சென்ற நீதிபதியையே அச்சுறுத்தும் தோரணையில் பேசுவதும் நீதிபதியின்மீதே குற்றம் சுமத்துவதும் சகல நீதிபதிகளும் நீதித்துறையும் தாம் விரும்பியவற்றையே செய்ய வேண்டும் என்று சிங்கள பௌத்த இனவாத சக்திகளின் எதிர்பார்ப்பை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. இது சுதந்திரமான நீதித்துறைக்கும் உகந்ததல்ல. பல்லின மக்கள் வாழும் நாட்டில் இவை முற்றுமுழுதாக மாற்றப்பட்டு ஒரு புதிய நீதிகலாசாரமும், அனைத்து மக்களும் ஏற்கக்கூடிய புதிய நீதித்துறையும் உருவாக்கப்படவேண்டும். இதற்கு முதற்படியாக ஆட்சியில் மதக்கலப்புகள் அகற்றப்பட்டு, இனவாதத் தன்மைகள் களையப்பட்டு ஒரு புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்படவேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement