• Sep 08 2024

யாழில் விபத்து..!தானே குற்றவாளி என இருவர் உரிமைகோரினர்..!குழப்பமடைந்த பொலிஸார்..!samugammedia

Sharmi / Jul 16th 2023, 9:59 am
image

Advertisement

யாழ் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபர் யார் என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்தியமைக்காக முன்னதாக ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், திடீர்த் திருப்பமாக பிறிதொருவர் தானே விபத்தை ஏற்படுத்தியதாக சரணடைந்துள்ளார்.

அதனையடுத்தே இந்தக் குழப்பம் எழுந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த பெப்ரவரி மாதம் கைதடி- மானிப்பாய் வீதியிலுள்ள கிருஸ்ணர் கோயிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் 24 வயதுடைய இளைஞர் உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய கார் தப்பிச் சென்ற நிலையில் சந்தேக நபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் துரிதப்படுத்தியிருந்தனர்.

இதன்போது விபத்தை ஏற்படுத்திய காரைச் செலுத்திச் சென்றவர் உரும்பிராயில் வைத்து கோப்பாய் பொலிஸாரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டார்.

இந்தநிலையில் மேலுமொரு சந்தேகநபர் குறித்த விபத்தை தானே ஏற்படுத்தியதாக சரணடைந்துள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழில் விபத்து.தானே குற்றவாளி என இருவர் உரிமைகோரினர்.குழப்பமடைந்த பொலிஸார்.samugammedia யாழ் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபர் யார் என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்தியமைக்காக முன்னதாக ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், திடீர்த் திருப்பமாக பிறிதொருவர் தானே விபத்தை ஏற்படுத்தியதாக சரணடைந்துள்ளார்.அதனையடுத்தே இந்தக் குழப்பம் எழுந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த பெப்ரவரி மாதம் கைதடி- மானிப்பாய் வீதியிலுள்ள கிருஸ்ணர் கோயிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் 24 வயதுடைய இளைஞர் உயிரிழந்தார்.விபத்தை ஏற்படுத்திய கார் தப்பிச் சென்ற நிலையில் சந்தேக நபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் துரிதப்படுத்தியிருந்தனர்.இதன்போது விபத்தை ஏற்படுத்திய காரைச் செலுத்திச் சென்றவர் உரும்பிராயில் வைத்து கோப்பாய் பொலிஸாரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டார்.இந்தநிலையில் மேலுமொரு சந்தேகநபர் குறித்த விபத்தை தானே ஏற்படுத்தியதாக சரணடைந்துள்ளார்.சந்தேகநபர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement