நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் முப்பது வான் கதவுகளில், 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும்,
கலா ஓயாவில் வினாடிக்கு 12,063 கன அடி நீர் கொள்ளளவு வெளியேற்றப்படுவதாகவும் நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உல்ஹிட்டிய - ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் தலா இரண்டு மீட்டர் அளவிற்கு திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக சோமாவதிய-சுங்காவில 36 ஆம் கட்டை பகுதி மற்றும் அவுகன- கெகிராவ வீதியிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்
நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் முப்பது வான் கதவுகளில், 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும்,கலா ஓயாவில் வினாடிக்கு 12,063 கன அடி நீர் கொள்ளளவு வெளியேற்றப்படுவதாகவும் நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், உல்ஹிட்டிய - ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் தலா இரண்டு மீட்டர் அளவிற்கு திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக சோமாவதிய-சுங்காவில 36 ஆம் கட்டை பகுதி மற்றும் அவுகன- கெகிராவ வீதியிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்