• Jan 16 2025

தேசிய மட்ட கபடிப் போட்டியில் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை வெற்றி..!

Sharmi / Jan 15th 2025, 3:09 pm
image

கல்வி அமைச்சுடன் இலங்கை பாடசாலை கபடி சங்கம் இணைந்து நடத்திய கபடி போட்டிகள் கடந்த 11,12,13,14 ஆம் திகதிகளில் 14, 16, 20 வயது கபடி அணிகளுக்கிடையே போட்டிகள் யாவும் கேகாலை வித்தியாலயம் மற்றும் கேகாலை சென்ட் ஜோசப் மகளிர் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றன.

இப்போட்டிகளில் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 14, 16, 20 ஆகிய மூன்று வயது பிரிவு அணிகளும் பங்குகொண்டு மூன்று அணிகளும் வெற்றி வாகை சூடி, பாடசாலைக்கு தேசிய ரீதியில் பெருமை சேர்த்துள்ளனர். 

இதில் 16 வயதுப் பிரிவு அணியினர்  "கோல்ட் மெடல்" பெற்றதோடு, 14 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவு இரு அணிகளும் "பிரவுன் மெடல்" பெற்றுள்ளனர்.

மேலும் 16 வயது பிரிவில் பெஸ்ட் பிளேயர் அவாட் விருதை மாணவன் ஏ.ஆர்.முஹம்மட் அன்ஸக் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




தேசிய மட்ட கபடிப் போட்டியில் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை வெற்றி. கல்வி அமைச்சுடன் இலங்கை பாடசாலை கபடி சங்கம் இணைந்து நடத்திய கபடி போட்டிகள் கடந்த 11,12,13,14 ஆம் திகதிகளில் 14, 16, 20 வயது கபடி அணிகளுக்கிடையே போட்டிகள் யாவும் கேகாலை வித்தியாலயம் மற்றும் கேகாலை சென்ட் ஜோசப் மகளிர் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றன.இப்போட்டிகளில் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 14, 16, 20 ஆகிய மூன்று வயது பிரிவு அணிகளும் பங்குகொண்டு மூன்று அணிகளும் வெற்றி வாகை சூடி, பாடசாலைக்கு தேசிய ரீதியில் பெருமை சேர்த்துள்ளனர். இதில் 16 வயதுப் பிரிவு அணியினர்  "கோல்ட் மெடல்" பெற்றதோடு, 14 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவு இரு அணிகளும் "பிரவுன் மெடல்" பெற்றுள்ளனர்.மேலும் 16 வயது பிரிவில் பெஸ்ட் பிளேயர் அவாட் விருதை மாணவன் ஏ.ஆர்.முஹம்மட் அன்ஸக் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement