• Nov 23 2024

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி..!

Sharmi / Oct 24th 2024, 11:04 am
image

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தத் தகுதி பெற்ற அரச ஊழியர்களில் 95 வீதத்திற்கும் அதிகமானோர் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தியுள்ளதாக காலி மாவட்டச் செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

அவசர நிலை ஏற்பட்டால், அதைச் சமாளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக 600 அரச உத்தியோகத்தர்கள் மற்றும் 500 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மாவட்டச் செயலாளர், வாக்குப்பெட்டிகள் நாளை (25) காலை விநியோகிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதேவேளை, வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணப்படும் எனவும், இரவு 10.00 மணிக்குள் வாக்குகளின் பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் காலி மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி. எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தத் தகுதி பெற்ற அரச ஊழியர்களில் 95 வீதத்திற்கும் அதிகமானோர் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தியுள்ளதாக காலி மாவட்டச் செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.அவசர நிலை ஏற்பட்டால், அதைச் சமாளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக 600 அரச உத்தியோகத்தர்கள் மற்றும் 500 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மாவட்டச் செயலாளர், வாக்குப்பெட்டிகள் நாளை (25) காலை விநியோகிக்கப்படும் என்றும் அறிவித்தார்.அதேவேளை, வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணப்படும் எனவும், இரவு 10.00 மணிக்குள் வாக்குகளின் பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் காலி மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார்.எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement