• May 09 2024

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த அனைவரும் புலிகள் அல்ல..!புலிகளும் இந்த நாட்டு மக்களே- சரோஜா சாவித்திரி..!samugammedia

Sharmi / May 20th 2023, 2:13 pm
image

Advertisement

யுத்தத்தின் போது உயிர்நீத்தவர்கள் அனைவரும் இந்த நாட்டு மக்கள் என்றும் எனவே அவர்கள் முள்ளிவாய்காலில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு உரிமை உள்ளதாக உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் தலைவர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற அனைவரும் புலிகள் அல்ல எனவும் அதேபோன்று முள்ளிவாய்காலில் உயிர்நீர்த்த அனைவரும் புலிகள் அல்ல என்றும் யுத்தத்தின் போது உயிர்நீத்தவர்கள் அனைவரும் இந்த நாட்டு மக்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் சூழ்ச்சிகளுக்குள் மக்கள் சிக்காமல் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையாக அனைத்து மக்களின் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் தலைவர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்காமல் மேலும் இனவாதம், மதவாதம் போன்ற விடயங்களை முன்நிலைப்படுத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக இராணுவம் மற்றும் பொலிசார் ஆகியோரை ஒன்று திரட்டி இனவாத பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த அனைவரும் புலிகள் அல்ல.புலிகளும் இந்த நாட்டு மக்களே- சரோஜா சாவித்திரி.samugammedia யுத்தத்தின் போது உயிர்நீத்தவர்கள் அனைவரும் இந்த நாட்டு மக்கள் என்றும் எனவே அவர்கள் முள்ளிவாய்காலில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு உரிமை உள்ளதாக உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் தலைவர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.வடக்கு கிழக்கில் வாழ்கின்ற அனைவரும் புலிகள் அல்ல எனவும் அதேபோன்று முள்ளிவாய்காலில் உயிர்நீர்த்த அனைவரும் புலிகள் அல்ல என்றும் யுத்தத்தின் போது உயிர்நீத்தவர்கள் அனைவரும் இந்த நாட்டு மக்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் சூழ்ச்சிகளுக்குள் மக்கள் சிக்காமல் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையாக அனைத்து மக்களின் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் தலைவர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்காமல் மேலும் இனவாதம், மதவாதம் போன்ற விடயங்களை முன்நிலைப்படுத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.குறிப்பாக இராணுவம் மற்றும் பொலிசார் ஆகியோரை ஒன்று திரட்டி இனவாத பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement