• May 18 2024

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு மீன்களை இறக்குமதி செய்ய அனுமதி...!samugammedia

Sharmi / Oct 25th 2023, 10:30 am
image

Advertisement

இலங்கையில் அறுவடை செய்யப்படாத மீன்களையே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

முல்லைத்தீவிற்கு நேற்று(24) விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திற்கு சென்று கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

சீனாவிடம் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படுவது தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு,

தகவலில் உண்மைநிலை இருப்பது போல் தெரியவில்லை. என்னுடைய இராஜாங்க அமைச்சுக்கு தான் இலங்கை கடற்தொழில் கூட்டுதாபனத்தை கண்காணிக்கின்ற ,செயற்படுத்துகின்ற பொறுப்பை கொடுத்திருக்கின்றேன். அவர் நேர்மையாக, நியாயமாக சட்ட பூர்வமாக செய்ததாக தான் கூறுகிறார் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்

இலங்கையை சூழ வளம்மிக்க கடல் இருக்கின்ற நிலையில் வெளிநாடொன்றில் இருந்து மீன்களை இறக்குமதி செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது என வினவிய போது,

இலங்கை கடற்தொழில் கூட்டுஸ்தாபனத்திற்கு எனது பணிப்புரை என்னவென்றால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கையில் மிக குறுகிய அளவில் அறுவடை செய்யப்படுகின்ற அல்லது அறுவடை செய்யப்படாத மீன்களை தான் இறக்குமதி செய்யலாம் என கூறியிருக்கின்றேன்.

நியாயமான விலையில், தரமானதாக, திணைக்களத்தின் சட்ட திட்டங்கள் உட்பட்டவையாக இருக்க வேண்டும். இவ்வாறே இறக்குமதி செய்ய முடியும் என கூறியிருக்கின்றேன். அந்தவகையில் தான் இறக்குமதி செய்ததாக கூறுகிறார்கள். அதில் முறைகேடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவ்வாறு இருக்குமாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆனால் ஊடகங்களில் தவறான செய்திகள் வந்திருக்கின்றது. இது தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றேன். தவறுகள் ஏதும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு மீன்களை இறக்குமதி செய்ய அனுமதி.samugammedia இலங்கையில் அறுவடை செய்யப்படாத மீன்களையே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.முல்லைத்தீவிற்கு நேற்று(24) விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திற்கு சென்று கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.சீனாவிடம் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படுவது தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு,தகவலில் உண்மைநிலை இருப்பது போல் தெரியவில்லை. என்னுடைய இராஜாங்க அமைச்சுக்கு தான் இலங்கை கடற்தொழில் கூட்டுதாபனத்தை கண்காணிக்கின்ற ,செயற்படுத்துகின்ற பொறுப்பை கொடுத்திருக்கின்றேன். அவர் நேர்மையாக, நியாயமாக சட்ட பூர்வமாக செய்ததாக தான் கூறுகிறார் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்இலங்கையை சூழ வளம்மிக்க கடல் இருக்கின்ற நிலையில் வெளிநாடொன்றில் இருந்து மீன்களை இறக்குமதி செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது என வினவிய போது,இலங்கை கடற்தொழில் கூட்டுஸ்தாபனத்திற்கு எனது பணிப்புரை என்னவென்றால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கையில் மிக குறுகிய அளவில் அறுவடை செய்யப்படுகின்ற அல்லது அறுவடை செய்யப்படாத மீன்களை தான் இறக்குமதி செய்யலாம் என கூறியிருக்கின்றேன்.நியாயமான விலையில், தரமானதாக, திணைக்களத்தின் சட்ட திட்டங்கள் உட்பட்டவையாக இருக்க வேண்டும். இவ்வாறே இறக்குமதி செய்ய முடியும் என கூறியிருக்கின்றேன். அந்தவகையில் தான் இறக்குமதி செய்ததாக கூறுகிறார்கள். அதில் முறைகேடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவ்வாறு இருக்குமாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.ஆனால் ஊடகங்களில் தவறான செய்திகள் வந்திருக்கின்றது. இது தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றேன். தவறுகள் ஏதும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement