• May 19 2024

புத்தளம் பெரிய பள்ளிக்கு நல்லிணக்க விஜயம் மேற்கொண்ட சர்வமத குழுவினர்...!samugammedia

Sharmi / Oct 6th 2023, 11:26 am
image

Advertisement

மாத்தறை மாவட்டத்தில் இருந்து சர்வ மத குழுவொன்று நல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணம் செல்லும் வழியில் புத்தளம் பெரிய பள்ளியை பார்வையிடுவதற்காக நேற்று (5) மாலை விஜயம் செய்தனர்.

இந்தக் குழுவில் மாத்தறை மாவட்ட மேலதிக செயலாளர், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பௌத்த மதகுருமார்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 65 இற்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.

இவ்வாறு புத்தளம் பெரிய பள்ளிக்கு வருகை தந்த குழுவினருடன் "இஸ்லாம் காட்டும் சக வாழ்வு" என்ற தலைப்பில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. 

இதில் புத்தளம் மாவட்ட  சர்வமதக் குழுவின் உறுப்பினர்கள் , புத்தளம் பெரிய பள்ளி நிருவாக சபையினர் , புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், குறித்த நல்லிணக்க விஜயத்தை மேற்கொண்ட குழுவினருக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அல்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பும், ஏனய சிங்கள வெளியீடுகளும், 
பஹன மீடியாவின் "சந்த கடன சந்த" என்ற நூலும் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


புத்தளம் பெரிய பள்ளிக்கு நல்லிணக்க விஜயம் மேற்கொண்ட சர்வமத குழுவினர்.samugammedia மாத்தறை மாவட்டத்தில் இருந்து சர்வ மத குழுவொன்று நல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணம் செல்லும் வழியில் புத்தளம் பெரிய பள்ளியை பார்வையிடுவதற்காக நேற்று (5) மாலை விஜயம் செய்தனர்.இந்தக் குழுவில் மாத்தறை மாவட்ட மேலதிக செயலாளர், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பௌத்த மதகுருமார்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 65 இற்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.இவ்வாறு புத்தளம் பெரிய பள்ளிக்கு வருகை தந்த குழுவினருடன் "இஸ்லாம் காட்டும் சக வாழ்வு" என்ற தலைப்பில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதில் புத்தளம் மாவட்ட  சர்வமதக் குழுவின் உறுப்பினர்கள் , புத்தளம் பெரிய பள்ளி நிருவாக சபையினர் , புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.அத்துடன், குறித்த நல்லிணக்க விஜயத்தை மேற்கொண்ட குழுவினருக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அல்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பும், ஏனய சிங்கள வெளியீடுகளும், பஹன மீடியாவின் "சந்த கடன சந்த" என்ற நூலும் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement