• Sep 20 2024

பண்டைய தமிழ் இறையாண்மை பொங்கலே மீளவும் வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

Tamil nila / Jan 15th 2023, 4:55 pm
image

Advertisement

'பண்டைய தமிழ் இறையாண்மை பொங்கலே மீளவும் வேண்டும்' இதனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெற்றுத் தர வேண்டும் எனத் தெரிவித்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.



காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வவுனியாவில் 2156 ஆவது நாளாக சுழற்சி முறையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மாரால் அவர்களது போரட்ட கொட்டகை முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (15.01) இடம்பெற்றது.



போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாரும், சிறுவர்களும் பண்டைய தமிழ் இறையாண்மை பொங்கல் வேண்டும் என எழுதப்பட்ட பொங்கல் பானைகளை ஏந்தியவாறும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும் போராட்த்தில் ஈடுபட்டனர்.



இதன்போது காணாமல் ஆகப்பட்ட தமது பிள்ளைகள் மீள வந்த பின்னரே எமக்கு பொங்கல் எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார் கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டடிருந்தனர்.

பண்டைய தமிழ் இறையாண்மை பொங்கலே மீளவும் வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் 'பண்டைய தமிழ் இறையாண்மை பொங்கலே மீளவும் வேண்டும்' இதனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெற்றுத் தர வேண்டும் எனத் தெரிவித்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வவுனியாவில் 2156 ஆவது நாளாக சுழற்சி முறையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மாரால் அவர்களது போரட்ட கொட்டகை முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (15.01) இடம்பெற்றது.போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாரும், சிறுவர்களும் பண்டைய தமிழ் இறையாண்மை பொங்கல் வேண்டும் என எழுதப்பட்ட பொங்கல் பானைகளை ஏந்தியவாறும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும் போராட்த்தில் ஈடுபட்டனர்.இதன்போது காணாமல் ஆகப்பட்ட தமது பிள்ளைகள் மீள வந்த பின்னரே எமக்கு பொங்கல் எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார் கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டடிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement