• Nov 11 2024

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் 7ஆம் திகதி அறிவிப்பு

Sharmi / Aug 2nd 2024, 8:43 am
image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்  அறிவிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல சுற்று கலந்துரையாடல்கள் எதிர்வரும் நாட்களில் கொழும்பு நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் முன்னதாக அறிவிக்கப்படவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அது தாமதமானது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களாக நான்கு பேரை முன்னிறுத்துவதற்கு கடந்த காலங்களில் பேசப்பட்டது. பெரும்பாலான மக்கள் தொழில்முனைவோரான தம்மிக்க பெரேராவிடம் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

இதேவேளை, கடந்த திங்கட்கிழமை 29ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபைக் கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் தனி வேட்பாளரை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் 7ஆம் திகதி அறிவிப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்  அறிவிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேவேளை,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல சுற்று கலந்துரையாடல்கள் எதிர்வரும் நாட்களில் கொழும்பு நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் முன்னதாக அறிவிக்கப்படவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அது தாமதமானது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களாக நான்கு பேரை முன்னிறுத்துவதற்கு கடந்த காலங்களில் பேசப்பட்டது. பெரும்பாலான மக்கள் தொழில்முனைவோரான தம்மிக்க பெரேராவிடம் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.இதேவேளை, கடந்த திங்கட்கிழமை 29ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபைக் கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் தனி வேட்பாளரை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement