• Nov 23 2024

இலங்கையில் மற்றுமொரு கொரோனா மரணம் பதிவு...! மக்களே அவதானம்...!samugammedia

Sharmi / Dec 28th 2023, 1:14 pm
image

சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-நிமோனியா என தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யக்கல பிரதேசத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள பிரதேசத்தில் வசித்து வந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் போது, ​​அவர் கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக கம்பஹா மரண விசாரணை அதிகாரி டாக்டர் பி.பி.ஆர்.பி.ராஜபக்ஷ தெரிவித்தார். 

கம்பஹா மாநகரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள கஸகஹவத்தை சுடுகாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உயிரிழந்தவரின் சடலத்தை தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சில நாட்களுக்கு முன்னர் கண்டி மஹரோஹல பிரதேசத்திலும் கொரோனா தொற்று பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மற்றுமொரு கொரோனா மரணம் பதிவு. மக்களே அவதானம்.samugammedia சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-நிமோனியா என தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.யக்கல பிரதேசத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள பிரதேசத்தில் வசித்து வந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பிரேத பரிசோதனையின் போது, ​​அவர் கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக கம்பஹா மரண விசாரணை அதிகாரி டாக்டர் பி.பி.ஆர்.பி.ராஜபக்ஷ தெரிவித்தார். கம்பஹா மாநகரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள கஸகஹவத்தை சுடுகாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உயிரிழந்தவரின் சடலத்தை தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில நாட்களுக்கு முன்னர் கண்டி மஹரோஹல பிரதேசத்திலும் கொரோனா தொற்று பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement