• Mar 19 2025

ஜனவரி மாதத்தில் மட்டும் ஒரு ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்ற அநுர அரசு!

Chithra / Mar 18th 2025, 9:30 am
image

 

அநுர அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் மாத்திரம் ஒரு ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. 

திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலம் அரசாங்கம் இந்த கடனை பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. 

அத்துடன் கடந்த பெப்ரவரி மாதத்தில் அரசாங்கம் 750 பில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளது. 

இந்த மாதத்தின் கடந்த 14 நாட்களில் அரசாங்கம் 580 பில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 

இதன்படி திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலம் அரசாங்கம் இந்த வருடத்தில் இதுவரை 2.3 ட்ரில்லியன் ரூபாவினை கடனாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனவரி மாதத்தில் மட்டும் ஒரு ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்ற அநுர அரசு  அநுர அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் மாத்திரம் ஒரு ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலம் அரசாங்கம் இந்த கடனை பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் கடந்த பெப்ரவரி மாதத்தில் அரசாங்கம் 750 பில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளது. இந்த மாதத்தின் கடந்த 14 நாட்களில் அரசாங்கம் 580 பில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதன்படி திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலம் அரசாங்கம் இந்த வருடத்தில் இதுவரை 2.3 ட்ரில்லியன் ரூபாவினை கடனாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement