• Nov 26 2024

தலிபான்களைப் போன்ற ஆட்சியை முன்னெடுக்க அனுரகுமார முயற்சி! - ரணில் தரப்பு பகிரங்க குற்றச்சாட்டு

Chithra / Sep 9th 2024, 9:19 am
image

 

இடதுசாரி தலைவர்கள் அதிகாரத்துக்கு வந்த எந்த நாடும் முன்னேற்றமடைந்தும் இல்லை. அந்த நாட்டு மக்கள் அழகான வாழ்க்கை வாழ்ந்ததும் இல்லை, என ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்ட அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர்  தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தின் நோக்கமாக இருப்பது, வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதாகும். 

ஆனால் இடதுசாது தலைவர்கள் அதிகாரத்தில் இருக்கும் எங்காவது வளமான நாடு அழகான வாழ்க்கை இருக்கும் நாட்டொன்றை முடியுமானால் இவர்கள் காட்டவேண்டும்.

கியுபாவின் இடதுசாரி கொள்கையுடைய ஆட்சியாளரான பிடல் கஸ்ட்ரோ சிறந்த ஜனநாயக தலைவர். ஆனால் அவருக்கு அவது நாட்டை கட்டியெழுப்ப முடியாமல் போனது. 

அனுரகுமார திஸாநாயக்கவும் இடதுசாரி கொள்கையுடைய தலைவர். இரண்டு தடவைகள் ஆயுத முனையில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தவர். 

அப்படிப்பட்ட ஒருவர் ஜனநாயக முறையில் அரசியல் கட்சி ஊடாக அதிகாரத்துக்கு வர முயற்சிக்கிறார். அவர்களின் எதிர்காலம் அனைவருக்கும் தெரியும். 

நாட்டில் வன்முறையை தோற்றுவித்து பல அழிவுகளை மேற்கொண்டவர்கள். அதனால் அவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் எவ்வாறான நிலை ஏற்படும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

அதேநேரம் அடிப்படைவாத கொள்கையுடை தலிபான் ஆட்சியை போன்ற ஆட்சிக்கே அனுரகுமார முயற்சிக்கிறார். அந்த நிலைக்கு எமது நாட்டை கொண்டு செல்ல மக்கள் இடமளிக்கப்போவதில்லை என்றார்.

தலிபான்களைப் போன்ற ஆட்சியை முன்னெடுக்க அனுரகுமார முயற்சி - ரணில் தரப்பு பகிரங்க குற்றச்சாட்டு  இடதுசாரி தலைவர்கள் அதிகாரத்துக்கு வந்த எந்த நாடும் முன்னேற்றமடைந்தும் இல்லை. அந்த நாட்டு மக்கள் அழகான வாழ்க்கை வாழ்ந்ததும் இல்லை, என ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்ட அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.அவர்  தொடர்ந்து தெரிவிக்கையில்,தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தின் நோக்கமாக இருப்பது, வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதாகும். ஆனால் இடதுசாது தலைவர்கள் அதிகாரத்தில் இருக்கும் எங்காவது வளமான நாடு அழகான வாழ்க்கை இருக்கும் நாட்டொன்றை முடியுமானால் இவர்கள் காட்டவேண்டும்.கியுபாவின் இடதுசாரி கொள்கையுடைய ஆட்சியாளரான பிடல் கஸ்ட்ரோ சிறந்த ஜனநாயக தலைவர். ஆனால் அவருக்கு அவது நாட்டை கட்டியெழுப்ப முடியாமல் போனது. அனுரகுமார திஸாநாயக்கவும் இடதுசாரி கொள்கையுடைய தலைவர். இரண்டு தடவைகள் ஆயுத முனையில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தவர். அப்படிப்பட்ட ஒருவர் ஜனநாயக முறையில் அரசியல் கட்சி ஊடாக அதிகாரத்துக்கு வர முயற்சிக்கிறார். அவர்களின் எதிர்காலம் அனைவருக்கும் தெரியும். நாட்டில் வன்முறையை தோற்றுவித்து பல அழிவுகளை மேற்கொண்டவர்கள். அதனால் அவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் எவ்வாறான நிலை ஏற்படும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.அதேநேரம் அடிப்படைவாத கொள்கையுடை தலிபான் ஆட்சியை போன்ற ஆட்சிக்கே அனுரகுமார முயற்சிக்கிறார். அந்த நிலைக்கு எமது நாட்டை கொண்டு செல்ல மக்கள் இடமளிக்கப்போவதில்லை என்றார்.

Advertisement

Advertisement

Advertisement