• May 10 2025

பொருளாதார வளர்ச்சியை வரையறுப்பதற்கு அரசின் 159 உறுப்பினர்களுக்கு வெட்கமில்லையா? - ஹர்ஷ எம்.பி. சீற்றம்

Chithra / May 9th 2025, 9:41 am
image

 

பொருளாதார வளர்ச்சியை 3 முதல் 3.1  சதவீதத்துக்கு வரையறுப்பதாக குறிப்பிடுவதற்கு அரசாங்கத்தின் 159 உறுப்பினர்களுக்கு வெட்கமில்லையா? இதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார். 

பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கான பெருமையை கடந்த அரசாங்கத்துக்கு வழங்குங்கள். பணவீக்கம் மற்றும் வட்டி வீதம் கடந்த அரசாங்கத்தின் காலத்திலேயே குறைவடைந்தது. ஆகவே உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். 

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2025ஆம்  ஆண்டு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தால் உயர்வடையும் என்று கடந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் தற்போது பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாக வரையறுக்கப்படும் என்று குறிப்பிடப்படுகிறது. 

சமூக கட்டமைப்பில் ஏழ்மை 33 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. 

பொருளாதாரம் வளர்ச்சியடையாவிடின் எவ்வாறு புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக்கொள்வது? 

2048 ஆம் ஆண்டு இலங்கையை அபிவிருத்தியடையும் நாடு என்ற நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டுமாயின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8 சதவீதத்தால் உயர்வடைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  குறிப்பிட்டார். இந்த கூற்றுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி அவரை பார்த்து  அப்போது சிரித்தீர்கள்.

பொருளாதார வளர்ச்சி நோக்கிச் செல்வதாயின் எந்த வகையிலான பொருளாதார கொள்கையை செயற்படுத்த வேண்டும் என்பது அரசாங்கத்துக்கு தெரியாது. இதுதான் அடிப்படை பிரச்சினையாகும் என்றார்.

பொருளாதார வளர்ச்சியை வரையறுப்பதற்கு அரசின் 159 உறுப்பினர்களுக்கு வெட்கமில்லையா - ஹர்ஷ எம்.பி. சீற்றம்  பொருளாதார வளர்ச்சியை 3 முதல் 3.1  சதவீதத்துக்கு வரையறுப்பதாக குறிப்பிடுவதற்கு அரசாங்கத்தின் 159 உறுப்பினர்களுக்கு வெட்கமில்லையா இதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார். பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கான பெருமையை கடந்த அரசாங்கத்துக்கு வழங்குங்கள். பணவீக்கம் மற்றும் வட்டி வீதம் கடந்த அரசாங்கத்தின் காலத்திலேயே குறைவடைந்தது. ஆகவே உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.2025ஆம்  ஆண்டு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தால் உயர்வடையும் என்று கடந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாக வரையறுக்கப்படும் என்று குறிப்பிடப்படுகிறது. சமூக கட்டமைப்பில் ஏழ்மை 33 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. பொருளாதாரம் வளர்ச்சியடையாவிடின் எவ்வாறு புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக்கொள்வது 2048 ஆம் ஆண்டு இலங்கையை அபிவிருத்தியடையும் நாடு என்ற நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டுமாயின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8 சதவீதத்தால் உயர்வடைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  குறிப்பிட்டார். இந்த கூற்றுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி அவரை பார்த்து  அப்போது சிரித்தீர்கள்.பொருளாதார வளர்ச்சி நோக்கிச் செல்வதாயின் எந்த வகையிலான பொருளாதார கொள்கையை செயற்படுத்த வேண்டும் என்பது அரசாங்கத்துக்கு தெரியாது. இதுதான் அடிப்படை பிரச்சினையாகும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement