விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 நிறைவடைந்துஇருந்தது . பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு பிரபலத்திற்கு ஏற்றார்போல சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் இம்முறை போட்டியாளராக கலந்து கொண்ட பிரபலங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
மேலும் அதில் பிக் பாஸ் 4-ல் கலந்து கொண்டள்ள போட்டியாளர்களுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாயும் குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு பத்தாயிரம் ரூபாயும் போட்டியாளர்கள் பெற்றுள்ளனர்.
மேலும் இந்த சீசனில் ரமேஷின் சம்பளம் ரூ.60,000. பாடகர் வேல்முருகனுக்கு ரூ.50,000. ரியோவுக்கு ஒருநாளுக்கு ரூ.35,000. ஆஜித்துக்கு ரூ.15,000. பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி, சோம் மூவருக்கும் நாளொன்றுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டு இருக்கிறது.
யார் யார் எத்தனை நாட்கள் இருந்தார்களோ அந்த நாட்களை கணக்கு செய்து வரி பிடித்தம் போக மீதி கையில் கிடைக்கும். இதில் நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் விரும்பி வழங்கும் பரிசுப் பொருட்களும் தனி என்கிறார்கள்.
அத்தோடு முதல் பரிசை வென்ற ஆரிக்கு 50,00,000 பரிசாக வழங்கப்பட்டது. அதில் 30 சதவீதம் வரி போக 35,00,000 கிடைக்கும். மேலும், பிக் பாஸ் வீட்டில் அவர் 105 நாள் இருந்ததை கணக்கு செய்து பார்க்கையில் நாளுக்கு 85,000 என்ற வீதம் 89,25,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 30 சதவீதம் வரி போக 62,47,500 ரூபாயை பெற்றுள்ளார். மொத்தத்தில் 35,00,000 பரிசுத்தொகை மற்றும் 62,27,500 ரூபாய் சம்பளம் என மொத்தம் ஆரி 97,47,500 ரூபாயை பிக் பாஸ் மூலம் பெற்றுள்ளார்.
பிற செய்திகள்:
- ஹேமந்ததே தான் காரணம்-நண்பர் ஒருவர் வெளியிட்டுள்ள ஆதாரம்!
- ரம்யா பாண்டியனின் வருகையை பட்டாசு வெடித்து மாஸாக கொண்டாடிய குடும்பம்!
- பிக்பாஸ் பாலாவிற்காக கதறி கதறி அழும் சிறுவன்; ஏன் தெரியுமா? வைரலாகும் வீடியோ
- பிக்பாஸுக்கு பிறகு ஆரி நடிக்கப் போகும் முதல் படம்; ஹீரோயின் யார் தெரியுமா..?
- பாலாஜியின் பதிவிற்கு உருக்கமாக பதிலளித்த ஷெரின்..!
- பிக் பாஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் துள்ளிக் குதித்து பாலா செய்த காரியம்-தீயாய் பரவும் காணொளி
- பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் பார்டியில் ஈழத்து தமிழ் ரசிகர்களுக்கு காத்திருந்த வியப்பு!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்