• Jun 02 2024

முக்கிய பொருளுடன் விசேட அதிரடிப்படையினரிடம் வசமாக சிக்கிய இராணுவ வீரர்..! samugammedia

Chithra / Jun 28th 2023, 1:52 pm
image

Advertisement

 இராணுவ வீரர் ஒருவர் 150 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகொட பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான லான்ஸ் கோப்ரல் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொஸ்கொட - லேலிஹேத்துவ பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர், நேற்றிரவு  10 மணியளவில் சந்தேகத்திற்குரிய வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த இராணுவ வீரர் போதைப்பொருளுடன் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து அவரை கைது செய்த விசேட அதிரடிப்படையினர், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


முக்கிய பொருளுடன் விசேட அதிரடிப்படையினரிடம் வசமாக சிக்கிய இராணுவ வீரர். samugammedia  இராணுவ வீரர் ஒருவர் 150 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.நாகொட பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான லான்ஸ் கோப்ரல் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.கொஸ்கொட - லேலிஹேத்துவ பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர், நேற்றிரவு  10 மணியளவில் சந்தேகத்திற்குரிய வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த இராணுவ வீரர் போதைப்பொருளுடன் சிக்கியுள்ளார்.இதனையடுத்து அவரை கைது செய்த விசேட அதிரடிப்படையினர், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement