• Sep 08 2024

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் - உலகிற்கு ஆபத்தானதா..! samugammedia

Chithra / May 3rd 2023, 6:00 pm
image

Advertisement

புளூம்பெர்க் இணையத்தளம் செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஏராளமான போலி செய்தி இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படத் தொடங்கியுள்ளதால், பல இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டு, நியூஸ்கார்ட் செய்தி மதிப்பீடு குழுவானது, AI மென்பொருட்களால் உருவாக்கப்பட்ட ஏராளமான செய்தி இணையத்தளங்களைக் கண்டறிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த இணையத்தளங்கள் AI மென்பொருட்களைப் பயன்படுத்தி போலிச் செய்திகளை வெளியிட்டு, நிரல் விளம்பரங்களை இயக்குவதன் மூலம் ஓரளவு வருமானம் ஈட்டியுள்ளன என்று ப்ளூம்பெர்க் இணையத்தளம்  தெரிவித்துள்ளது.

ப்ளூம்பெர்க்கின் இந்த அபாய எச்சரிக்கையுடன் இந்த இணையத்தளங்கள் மூலம் விளம்பரங்களை வெளியிடுவதை கூகுள் நீக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து  தான் மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்காக வருந்துவதாக  ஏஐ துறை முன்னோடிகளில் ஒருவரான  ஜெஃப்ரி ஹிண்டன் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன் ஏஐ நிறுவனம் ‘சாட்ஜிபிடி’ எனும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப மென்பொருளை அறிமுகம் செய்தது.

கேள்விகளுக்கு உடனே பதிலளித்தல், ஏதேனும் ஒரு தலைப்பை உள்ளீடு செய்தால் அது தொடர்பான தகவல்களைத் தொகுத்து வழங்கல்  என பல மொழி சார்ந்த செயல்பாடுகளை அதிவேகமாக அது செய்து வருகின்றது.

பல்வேறு துறைகளில் ஏஐ மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், இதை முறையாக கையாளாவிட்டால் மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக மாறும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஏஐ உருவாக்கத்தில் முன்னோடிகளில் ஒருவரான ஜெஃப்ரி ஹிண்டன், கூகுள் நிறுவனத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியதுடன்  சமீபத்தில் கூகுள் நிறுவனத்திலிருந்து விலகினார். 


அதன் பின்னர் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றியதால்  ஏஐ யின் ஆபத்து குறித்து வெளிப்படையாக தெரிவிக்க முடியாமல் போனதாகவும் “ஏஐ தொடர்பாக இதுவரையில் தான் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் குறித்து வருத்தம் அடைவதாகவும்  கூறியுள்ளார். 

அத்தோடு, ஏஐ முறையாக கையாளாவிடில் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்பதுடன்  தற்போது ஏஐ தொழில்நுட்பம் சார்ந்து நிறுவனங்களிடையே பெரும் போட்டி உருவாகியுள்ளதால் மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

ஏஐ மூலம் அதிகளவான  போலிச் செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுகின்றன. 

மேலும்  ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட செய்தி எது என்பதை கண்டறிய முடியாத நிலையில் மக்கள் இருப்பதாகவும்,  ஏஐ தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி கவலையளிப்பதாகவும்  ஜெஃப்ரி ஹிண்டன் தெரிவித்துள்ளார்.


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் - உலகிற்கு ஆபத்தானதா. samugammedia புளூம்பெர்க் இணையத்தளம் செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஏராளமான போலி செய்தி இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளது.செயற்கை நுண்ணறிவு மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படத் தொடங்கியுள்ளதால், பல இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டு, நியூஸ்கார்ட் செய்தி மதிப்பீடு குழுவானது, AI மென்பொருட்களால் உருவாக்கப்பட்ட ஏராளமான செய்தி இணையத்தளங்களைக் கண்டறிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மேலும் இந்த இணையத்தளங்கள் AI மென்பொருட்களைப் பயன்படுத்தி போலிச் செய்திகளை வெளியிட்டு, நிரல் விளம்பரங்களை இயக்குவதன் மூலம் ஓரளவு வருமானம் ஈட்டியுள்ளன என்று ப்ளூம்பெர்க் இணையத்தளம்  தெரிவித்துள்ளது.ப்ளூம்பெர்க்கின் இந்த அபாய எச்சரிக்கையுடன் இந்த இணையத்தளங்கள் மூலம் விளம்பரங்களை வெளியிடுவதை கூகுள் நீக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து  தான் மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்காக வருந்துவதாக  ஏஐ துறை முன்னோடிகளில் ஒருவரான  ஜெஃப்ரி ஹிண்டன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன் ஏஐ நிறுவனம் ‘சாட்ஜிபிடி’ எனும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப மென்பொருளை அறிமுகம் செய்தது.கேள்விகளுக்கு உடனே பதிலளித்தல், ஏதேனும் ஒரு தலைப்பை உள்ளீடு செய்தால் அது தொடர்பான தகவல்களைத் தொகுத்து வழங்கல்  என பல மொழி சார்ந்த செயல்பாடுகளை அதிவேகமாக அது செய்து வருகின்றது.பல்வேறு துறைகளில் ஏஐ மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், இதை முறையாக கையாளாவிட்டால் மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக மாறும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.ஏஐ உருவாக்கத்தில் முன்னோடிகளில் ஒருவரான ஜெஃப்ரி ஹிண்டன், கூகுள் நிறுவனத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியதுடன்  சமீபத்தில் கூகுள் நிறுவனத்திலிருந்து விலகினார். அதன் பின்னர் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றியதால்  ஏஐ யின் ஆபத்து குறித்து வெளிப்படையாக தெரிவிக்க முடியாமல் போனதாகவும் “ஏஐ தொடர்பாக இதுவரையில் தான் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் குறித்து வருத்தம் அடைவதாகவும்  கூறியுள்ளார். அத்தோடு, ஏஐ முறையாக கையாளாவிடில் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்பதுடன்  தற்போது ஏஐ தொழில்நுட்பம் சார்ந்து நிறுவனங்களிடையே பெரும் போட்டி உருவாகியுள்ளதால் மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏஐ மூலம் அதிகளவான  போலிச் செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுகின்றன. மேலும்  ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட செய்தி எது என்பதை கண்டறிய முடியாத நிலையில் மக்கள் இருப்பதாகவும்,  ஏஐ தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி கவலையளிப்பதாகவும்  ஜெஃப்ரி ஹிண்டன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement