முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 நபர்கள் மீது சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழு முன்னிலையில் இன்று குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசிகளை இறக்குமதி செய்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கடந்த 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தால் ஏழு மாதங்களுக்குப் பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
இதேவேளை- குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளில், குறிப்பிட்ட தரமற்ற மருந்தை இறக்குமதி செய்ததன் மூலம் 130 மில்லியன் ரூபா நிதி மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 நபர்கள் மீது சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழு முன்னிலையில் இன்று குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசிகளை இறக்குமதி செய்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கடந்த 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தால் ஏழு மாதங்களுக்குப் பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டது.இதேவேளை- குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளில், குறிப்பிட்ட தரமற்ற மருந்தை இறக்குமதி செய்ததன் மூலம் 130 மில்லியன் ரூபா நிதி மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.