• Apr 22 2025

மட்டக்களப்பு ஈஸ்டர் தாக்குதல் - கண்ணீர்மல்க நின்ற உறவுகள்

Thansita / Apr 21st 2025, 9:44 pm
image

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்;த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (21) இடம்பெற்றது. தேவாலயத்தின் முன்னால் உயிரிழந்தவர்களின் உறவுகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மெழுகுவர்தி ஏற்றி மலர் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர்.

அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிவதர்சன் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குண்டுவெடிப்பில் உயிரிழந்து மற்றும் படுகாயமடைந்து  பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். காலை 9.05 தேவாலயத்தின் முன்பகுதியில் உயிரிழந்தவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி மௌன  அஞ்சலி செலுத்தினர்.

இந்த நினைவேந்தலையிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு  கடமையில் பொலிசார் விமானப்படையினர் ஈடுபட்டிருந்தனர். இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு ஈஸ்டர் தாக்குதல் - கண்ணீர்மல்க நின்ற உறவுகள் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்;த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (21) இடம்பெற்றது. தேவாலயத்தின் முன்னால் உயிரிழந்தவர்களின் உறவுகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மெழுகுவர்தி ஏற்றி மலர் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர்.அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிவதர்சன் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குண்டுவெடிப்பில் உயிரிழந்து மற்றும் படுகாயமடைந்து  பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். காலை 9.05 தேவாலயத்தின் முன்பகுதியில் உயிரிழந்தவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி மௌன  அஞ்சலி செலுத்தினர்.இந்த நினைவேந்தலையிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு  கடமையில் பொலிசார் விமானப்படையினர் ஈடுபட்டிருந்தனர். இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement