• May 07 2024

பொன் அணிகளின் போர் - யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி! SamugamMedia

Tamil nila / Mar 7th 2023, 10:06 pm
image

Advertisement

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். புனித பத்திரிசிரியார் அணிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத்தின் தொடர்ச்சியாக 20:20 போட்டிகள் இன்றுமாலை யாழ். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.



நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணக்கல்லூரி அணி துடுப்பாட்டத்தினை முதலில் தெரிவுசெய்தனர்.



இன்றைய ஆட்டத்தில் 19.5 ஓவர்களில் அனைத்துவிக்கெட்டுக்களையும் இழந்து யாழ்ப்பாணக்கல்லூரி 86 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. யாழ்ப்பாண கல்லூரி அணி வீரர் பி.பிரிந்தன் 33 பந்துகளில் 25 ஓட்டங்களை பெற்றார்.



களத்தடுப்பில் புனித பத்திரிசிரியார் கல்லூரி அணியின் s.சமிந்தன்  3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.


 87 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பாட களமிறங்கிய புனித பத்திரிசியார் அணி 10.5 ஓவர்களில் 1 விக்கெட்டினை இழந்து  87 ஓட்டங்களை பெற்று 9 விக்கெற்றுகளால் வெற்றிபெற்றது. 



 புனித பத்திரிசிரியார் கல்லூரி அணி வீரர் எம்.சௌத்திகன் 6 ஆறு ஓட்டங்கள் 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 69 ஓட்டங்களை பெற்று பொன் அணிகளின் போரின் 20:20 போட்டி வரலாற்றில்  புதிய சாதனையொன்றை நிலை நாட்டிதுடயதுடன் சிறந்த ஆட்ட நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.


 இப்போட்டிகளுக்கு மொபிற்றல் நிறுவனம். அடுசரணை வழங்கியது. அடுத்த வருட பெருந்துடுப்பாட்டம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

பொன் அணிகளின் போர் - யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி SamugamMedia பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். புனித பத்திரிசிரியார் அணிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத்தின் தொடர்ச்சியாக 20:20 போட்டிகள் இன்றுமாலை யாழ். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணக்கல்லூரி அணி துடுப்பாட்டத்தினை முதலில் தெரிவுசெய்தனர்.இன்றைய ஆட்டத்தில் 19.5 ஓவர்களில் அனைத்துவிக்கெட்டுக்களையும் இழந்து யாழ்ப்பாணக்கல்லூரி 86 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. யாழ்ப்பாண கல்லூரி அணி வீரர் பி.பிரிந்தன் 33 பந்துகளில் 25 ஓட்டங்களை பெற்றார்.களத்தடுப்பில் புனித பத்திரிசிரியார் கல்லூரி அணியின் s.சமிந்தன்  3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 87 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பாட களமிறங்கிய புனித பத்திரிசியார் அணி 10.5 ஓவர்களில் 1 விக்கெட்டினை இழந்து  87 ஓட்டங்களை பெற்று 9 விக்கெற்றுகளால் வெற்றிபெற்றது.  புனித பத்திரிசிரியார் கல்லூரி அணி வீரர் எம்.சௌத்திகன் 6 ஆறு ஓட்டங்கள் 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 69 ஓட்டங்களை பெற்று பொன் அணிகளின் போரின் 20:20 போட்டி வரலாற்றில்  புதிய சாதனையொன்றை நிலை நாட்டிதுடயதுடன் சிறந்த ஆட்ட நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார். இப்போட்டிகளுக்கு மொபிற்றல் நிறுவனம். அடுசரணை வழங்கியது. அடுத்த வருட பெருந்துடுப்பாட்டம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement