• Jun 17 2024

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மீட்பு! SamugamMedia

Chithra / Feb 20th 2023, 7:59 pm
image

Advertisement

இந்தியாவிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கற்பிட்டடி சம்மட்டவாடி கடற்கரைப் பகுதியில் பொலிஸார் இன்று அதிகாலை (20) தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது 19 உரைப்பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் சுமார் 760 கிலோ பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 1.5 கோடி ரூபா பெருமதியென மதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சுற்றிவளைப்பில் எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை கற்பிட்டி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக இந்தியாவிலிருந்து கற்பிட்டி பகுதிக்கு ஐஸ், கேரளா கஞ்சா, உலர்ந்த மஞ்சள் கிருமிநாசினிகள், ஏலக்காய் மூடைகள், கடலட்டைகள், சுறா இறகுகள், பாதனிகள், இலத்திரனியல் உபகரணஙகள் கடத்தப்பட்டு வருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.


இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மீட்பு SamugamMedia இந்தியாவிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கற்பிட்டடி சம்மட்டவாடி கடற்கரைப் பகுதியில் பொலிஸார் இன்று அதிகாலை (20) தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.இதன்போது 19 உரைப்பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் சுமார் 760 கிலோ பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 1.5 கோடி ரூபா பெருமதியென மதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சுற்றிவளைப்பில் எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை கற்பிட்டி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.அண்மைக்காலமாக இந்தியாவிலிருந்து கற்பிட்டி பகுதிக்கு ஐஸ், கேரளா கஞ்சா, உலர்ந்த மஞ்சள் கிருமிநாசினிகள், ஏலக்காய் மூடைகள், கடலட்டைகள், சுறா இறகுகள், பாதனிகள், இலத்திரனியல் உபகரணஙகள் கடத்தப்பட்டு வருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement