• Jun 26 2024

யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருட்டு; ஒருவர் கைது! SamugamMedia

Chithra / Feb 20th 2023, 7:56 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவமொன்றில் திருடப்பட்ட 10 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான நகைகள் தெல்லிப்பழை பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரொருவரும் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம்(19) மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் பத்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பொலிஸ் பரிசோதகர் கலாவினோதன் தலைமையிலான தெல்லிப்பழை குற்றத்தடுப்பு பொலிஸார் இன்றைய தினம் சந்தேக நபரையும் திருடப்பட்ட நகைகளையும் மீட்டனர்.

சந்தேக நபரையும் மீட்கப்பட்ட நகைகளையும் நாளைய தினம்(20) மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருட்டு; ஒருவர் கைது SamugamMedia யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவமொன்றில் திருடப்பட்ட 10 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான நகைகள் தெல்லிப்பழை பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரொருவரும் கைது செய்யப்பட்டார்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,நேற்றைய தினம்(19) மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் பத்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் பொலிஸ் பரிசோதகர் கலாவினோதன் தலைமையிலான தெல்லிப்பழை குற்றத்தடுப்பு பொலிஸார் இன்றைய தினம் சந்தேக நபரையும் திருடப்பட்ட நகைகளையும் மீட்டனர்.சந்தேக நபரையும் மீட்கப்பட்ட நகைகளையும் நாளைய தினம்(20) மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement