• May 07 2024

வீதிக்கு வந்த படகுகள்...! திடீரென குவிந்த மீனவர்கள்...! வெளியான காரணம்...!samugammedia

Sharmi / Sep 18th 2023, 9:31 am
image

Advertisement

நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்ற கடலரிப்பிற்கு தீர்வு காணுமாறு சாய்ந்தமருது மீனவர்கள் வீதியை மறித்து போராட்டம் ஒன்றினை இன்று மேற்கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் காலநிலை மாற்றம் காரணமான கடும் கடலரிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன.

இதில் சாய்ந்தமருது பகுதி கடற்கரை பகுதி பெரும்பாலும் கடலரிப்பு அதிகமாக இடம்பெற்று வருவதுடன் மீனவர்களும் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

இந்த கடலரிப்பு காரணமாக மீனவர்களின் ஓய்வு அறைகள் வாடிகள் பள்ளிவாசல்கள் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அத்துடன் மீனவர்களின் தோணிகள் வலைகள் கடலரிப்பினால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளன.

மேலும் , குறித்த கடலரிப்பினை தடுப்பதற்காக கரையோரம் பேணல் திணைக்களம் பல்வேறு நடவடிக்கைககளை மேற்கொண்டுள்ளதுடன் பாரிய கற்களும் வெளியிடங்களில் இருந்து கனரக வாகனங்களின் உதவியுடன்  கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆனால் இக்கற்கள் தமது மீன்பிடி தொழிலை பாதிப்புறும் வகையில் போடப்பட்டுள்ளதாகவும் கற்களில் மோதி தமது தோணிகள் உடைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் குறித்த போராட்டத்தை சாய்ந்தமருது பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தள்ளதுடன் மீனவர்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.




வீதிக்கு வந்த படகுகள். திடீரென குவிந்த மீனவர்கள். வெளியான காரணம்.samugammedia நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்ற கடலரிப்பிற்கு தீர்வு காணுமாறு சாய்ந்தமருது மீனவர்கள் வீதியை மறித்து போராட்டம் ஒன்றினை இன்று மேற்கொண்டனர்.அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் காலநிலை மாற்றம் காரணமான கடும் கடலரிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன.இதில் சாய்ந்தமருது பகுதி கடற்கரை பகுதி பெரும்பாலும் கடலரிப்பு அதிகமாக இடம்பெற்று வருவதுடன் மீனவர்களும் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.இந்த கடலரிப்பு காரணமாக மீனவர்களின் ஓய்வு அறைகள் வாடிகள் பள்ளிவாசல்கள் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.அத்துடன் மீனவர்களின் தோணிகள் வலைகள் கடலரிப்பினால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளன.மேலும் , குறித்த கடலரிப்பினை தடுப்பதற்காக கரையோரம் பேணல் திணைக்களம் பல்வேறு நடவடிக்கைககளை மேற்கொண்டுள்ளதுடன் பாரிய கற்களும் வெளியிடங்களில் இருந்து கனரக வாகனங்களின் உதவியுடன்  கொண்டு வரப்பட்டுள்ளன.ஆனால் இக்கற்கள் தமது மீன்பிடி தொழிலை பாதிப்புறும் வகையில் போடப்பட்டுள்ளதாகவும் கற்களில் மோதி தமது தோணிகள் உடைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.அத்துடன் குறித்த போராட்டத்தை சாய்ந்தமருது பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தள்ளதுடன் மீனவர்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement