• May 18 2024

மண்டைதீவு ஆலயக் கிணற்றில் 60 இளைஞர்களின் சடலங்கள் – சபையில் சிறீதரன் எம்.பி samugammedia

Chithra / Jul 7th 2023, 1:07 pm
image

Advertisement

மண்கும்பான் அல்லைபிட்டியில் இருந்து அழைத்து வரப்பட்ட 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எம்.பி சற்றுமுன் சபையில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொக்குதொடுவாயில் பல பெண் போராளிகளின் உடல்கள் எனக் கூறப்படும் பல மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. இந்த நாட்டில் எங்கு பார்த்தாலும் தமிழ்ப் போராளிகளின் உடல்கள் எடுப்பது போல இந்த மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றையும் துப்புரவு செய்தால் சுமார் 60க்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்களை தோண்டி எடுக்க முடியும்.

இதன் காரணமாகவே இலங்கை இராணுவத்தினர் அந்த இடத்தில் உள்ள மக்களின் காணிகளை பறிக்க முயற்சிக்கின்றார்கள் என்றார்.

மண்டைதீவில் சதாசிவம் செந்தில் மணி, வைரவநாதன் மகேஸ்வரி உள்ளிட்ட பலரின் காணிகளை இராணுவத்தினர் பலவந்தமாக கைப்பற்றியுள்ளனர். 

இதனால் அந்த காணிகளுக்கு சொந்தக்காரர்கள் இலங்கையின் பல பகுதிகளில் அகதிகளாக வாழ்கிறார்கள். நல்லிணக்கம் பேசும் அரசாங்கம், சமாதானம் பேசும் அரசாங்கம் இப்பொஐழுதும் அவர்களின் காணிகளை பரிக்க முயற்சிக்கின்றமை மிக மோசமான செயலாகும் என்றார்.


மண்டைதீவு ஆலயக் கிணற்றில் 60 இளைஞர்களின் சடலங்கள் – சபையில் சிறீதரன் எம்.பி samugammedia மண்கும்பான் அல்லைபிட்டியில் இருந்து அழைத்து வரப்பட்ட 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எம்.பி சற்றுமுன் சபையில் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,கொக்குதொடுவாயில் பல பெண் போராளிகளின் உடல்கள் எனக் கூறப்படும் பல மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. இந்த நாட்டில் எங்கு பார்த்தாலும் தமிழ்ப் போராளிகளின் உடல்கள் எடுப்பது போல இந்த மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றையும் துப்புரவு செய்தால் சுமார் 60க்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்களை தோண்டி எடுக்க முடியும்.இதன் காரணமாகவே இலங்கை இராணுவத்தினர் அந்த இடத்தில் உள்ள மக்களின் காணிகளை பறிக்க முயற்சிக்கின்றார்கள் என்றார்.மண்டைதீவில் சதாசிவம் செந்தில் மணி, வைரவநாதன் மகேஸ்வரி உள்ளிட்ட பலரின் காணிகளை இராணுவத்தினர் பலவந்தமாக கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்த காணிகளுக்கு சொந்தக்காரர்கள் இலங்கையின் பல பகுதிகளில் அகதிகளாக வாழ்கிறார்கள். நல்லிணக்கம் பேசும் அரசாங்கம், சமாதானம் பேசும் அரசாங்கம் இப்பொஐழுதும் அவர்களின் காணிகளை பரிக்க முயற்சிக்கின்றமை மிக மோசமான செயலாகும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement