• Jan 13 2025

கொச்சிக்கடையில் நீர் குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்!

Chithra / Jan 10th 2025, 10:29 am
image

 

நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பவுலுக் சில்வா மாவத்தை பகுதியில், விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் பவுலுக் சில்வா மாவத்தையில் திரும்பும் சந்திக்கு அருகில் உள்ள நீர் குழியில் விழுந்தே நேற்று (09) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீதவான் விசாரணையின் பின்னர், சடலம் நீர்கொழும்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,

கிடைத்த தகவலின் அடிப்படையில், கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

கொச்சிக்கடையில் நீர் குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்  நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பவுலுக் சில்வா மாவத்தை பகுதியில், விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் பவுலுக் சில்வா மாவத்தையில் திரும்பும் சந்திக்கு அருகில் உள்ள நீர் குழியில் விழுந்தே நேற்று (09) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.நீதவான் விசாரணையின் பின்னர், சடலம் நீர்கொழும்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,கிடைத்த தகவலின் அடிப்படையில், கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement