• Nov 18 2024

பாகிஸ்தானில் தேசியக்கொடி விற்பனை செய்த வணிக நிலையத்தில் குண்டுத்தாக்குதல் - மூவர் பலி

Anaath / Aug 15th 2024, 1:28 pm
image

பாகிஸ்தானில் தேசியக்கொடி விற்பனை செய்த வணிக நிலையத்தில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மூவர் பலியாகியுள்ளனர். இந்த சன்பவம் நேற்றைய தினம்(14) இடம்பெற்றுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

பாகிஸ்தானில் 77ஆவது சுதந்திரதினம் நேற்றையதினம் கொண்டாடப்பட்ட நிலையில்  பலூசிஸ்தானின் குயூடா பகுதியில் உள்ள கடை ஒன்றில் பாகிஸ்தான் தேசியக்கொடி விற்கப்பட்டு வந்தது. 

 இந்நிலையில்  பாகிஸ்தான் தேசியக்கொடியை விற்பனை செய்ய வேண்டாம் என பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு எச்சரிக்கை விடுத்திருந்தது. 

 குறித்த எச்சரிக்கையை மீறி தேசியக்கொடி விற்பனை செய்த கடைமீது நேற்று கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், இந்தத் தாக்குதலுக்கு பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தேசியக்கொடி விற்பனை செய்த வணிக நிலையத்தில் குண்டுத்தாக்குதல் - மூவர் பலி பாகிஸ்தானில் தேசியக்கொடி விற்பனை செய்த வணிக நிலையத்தில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மூவர் பலியாகியுள்ளனர். இந்த சன்பவம் நேற்றைய தினம்(14) இடம்பெற்றுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பாகிஸ்தானில் 77ஆவது சுதந்திரதினம் நேற்றையதினம் கொண்டாடப்பட்ட நிலையில்  பலூசிஸ்தானின் குயூடா பகுதியில் உள்ள கடை ஒன்றில் பாகிஸ்தான் தேசியக்கொடி விற்கப்பட்டு வந்தது.  இந்நிலையில்  பாகிஸ்தான் தேசியக்கொடியை விற்பனை செய்ய வேண்டாம் என பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு எச்சரிக்கை விடுத்திருந்தது.  குறித்த எச்சரிக்கையை மீறி தேசியக்கொடி விற்பனை செய்த கடைமீது நேற்று கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், இந்தத் தாக்குதலுக்கு பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement