• Apr 30 2024

இலங்கையிலுள்ள பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல்...? பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! பாதுகாப்பு அமைச்சு பரபரப்புத் தகவல் samugammedia

Chithra / Apr 19th 2023, 10:07 am
image

Advertisement

மத்திய மாகாணத்தில் உள்ள அலவத்துகொட பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பாக புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அலவத்துகொட பொலிஸ் நிலையத்திற்கு சுமார் 2.45 மணியளவில் அழைப்பு கிடைத்தது என்றும் இதனை அடுத்து விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அச்சுறுத்தல் தொடர்பான தகவல் கிடைப்பதற்கு முன் உளவுத்துறை தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை என அலவத்துகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

இருந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை வெடிகுண்டு மிரட்டல் குறித்து உளவுத்துறைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளது.

தற்போது வரை, பள்ளிவாசலுக்கு அருகாமையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது அச்சுறுத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டதாகவோ எந்த தகவலும் இல்லை.

மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், தமது கட்டளையை மீறி பயணிக்கும் வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கும் பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அக்குரணை பகுதி மக்கள் மத்தியில் சற்று பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.


இலங்கையிலுள்ள பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல். பலப்படுத்தப்படும் பாதுகாப்பு பாதுகாப்பு அமைச்சு பரபரப்புத் தகவல் samugammedia மத்திய மாகாணத்தில் உள்ள அலவத்துகொட பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பாக புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அலவத்துகொட பொலிஸ் நிலையத்திற்கு சுமார் 2.45 மணியளவில் அழைப்பு கிடைத்தது என்றும் இதனை அடுத்து விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.இந்த அச்சுறுத்தல் தொடர்பான தகவல் கிடைப்பதற்கு முன் உளவுத்துறை தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை என அலவத்துகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.இருந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதேவேளை வெடிகுண்டு மிரட்டல் குறித்து உளவுத்துறைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.எவ்வாறாயினும், இந்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளது.தற்போது வரை, பள்ளிவாசலுக்கு அருகாமையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது அச்சுறுத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டதாகவோ எந்த தகவலும் இல்லை.மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.அத்துடன், தமது கட்டளையை மீறி பயணிக்கும் வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கும் பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து, அக்குரணை பகுதி மக்கள் மத்தியில் சற்று பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement