• Nov 24 2024

போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு..!!

Tamil nila / May 13th 2024, 7:13 pm
image

நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  சந்தேக நபரான கணக்காளரை மீண்டும்  எதிர்வரும் மே  மாதம் 27 ஆந் திகதி வரை  14 நாட்கள் விளக்கமறியலில்  வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


இன்று(13) திங்கட்கிழமை   குறித்த  சந்தேக நபரை ஆஜர்படுத்திய வேளை மீண்டும் 14  நாட்கள் விளக்கமறியலில் மீண்டும் வைக்குமாறு   உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



சந்தேக நபரான கணக்காளர் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்    மருதமுனை பகுதியில் வைத்து  பெரிய நீலாவணை பொலிஸாரினால் ஏப்ரல் மாதம்  திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.


அண்மையில்  மருதமுனை நகரை அண்டிய பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரின்  வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் குறித்த கணக்காளரை கைது செய்ய  துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.


இதன் போது கணக்களார் வசம் இருந்து  ஐஸ் போதைப்பொருள் 840 மில்லி கிராம் கேரளா கஞ்சா 4 கிராமும் 540 மில்லி கிராமும் மீட்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் குறித்த சந்தேக நபர்  கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளராக பணியாற்றியவர் என்பதுடன் தற்போது அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளராகவும் தற்போது பணியில் இருப்பவர் என பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.


போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு. நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  சந்தேக நபரான கணக்காளரை மீண்டும்  எதிர்வரும் மே  மாதம் 27 ஆந் திகதி வரை  14 நாட்கள் விளக்கமறியலில்  வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.இன்று(13) திங்கட்கிழமை   குறித்த  சந்தேக நபரை ஆஜர்படுத்திய வேளை மீண்டும் 14  நாட்கள் விளக்கமறியலில் மீண்டும் வைக்குமாறு   உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.சந்தேக நபரான கணக்காளர் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்    மருதமுனை பகுதியில் வைத்து  பெரிய நீலாவணை பொலிஸாரினால் ஏப்ரல் மாதம்  திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.அண்மையில்  மருதமுனை நகரை அண்டிய பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரின்  வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் குறித்த கணக்காளரை கைது செய்ய  துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.இதன் போது கணக்களார் வசம் இருந்து  ஐஸ் போதைப்பொருள் 840 மில்லி கிராம் கேரளா கஞ்சா 4 கிராமும் 540 மில்லி கிராமும் மீட்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.மேலும் குறித்த சந்தேக நபர்  கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளராக பணியாற்றியவர் என்பதுடன் தற்போது அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளராகவும் தற்போது பணியில் இருப்பவர் என பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement