• Jun 26 2024

வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் மீது தலைவிரித்தாடும் பௌத்த மேலாதிக்கம்..! இலங்கைக்கு ஏற்படப்போகும் பேராபத்து samugammedia

Chithra / May 8th 2023, 12:10 pm
image

Advertisement

பயங்கரவாத யுத்தத்தினாலும் பொருளாதார அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட வடகிழக்கு வாழ் மக்கள் மீது பௌத்த மேலாதிக்கமும் தலை விரித்தாடுகின்றது என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட பள்ளி வாசல்கள் சம்மேளன செயலாளருமான எம்.எம்.மஹ்தி சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை மீடியா போர ஊடக மையத்தில் இன்று (08) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடகிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம் மக்களின் காணிகள் பல்வேறு வடிவங்களில் கபிலிகரம் செய்யப்படுகின்ற விடயத்தை நாங்கள் நேரடியாக கண்டு கொண்டிருக்கிறோம்.

தொல்பொருள் பாதுகாப்பு, புனித பிரதேச பிரகடனம், இராணுவ முகாம், குடியேற்றம், பௌத்த கோயில்கள் அமைப்பு  என பல்வேறு வடிவங்களில் சிறுபான்மை மக்களின் காணிகள் கையகபப்டுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.


பல்லின மக்கள் வாழுகின்ற இந்த நாட்டிலே அனைத்து மக்களும் சமத்துவத்தோடு வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டிய இத் தருணத்தில் சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களுடைய காணிகள் மீதும் தொடர்ந்தும் இவ்வாறான கையாகப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்ற போது இந் நாடு பொருளாதாரத்தால் மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாகும் எனவும் சர்வதேச நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்படுகின்ற அபாயத்தை ஏற்படுத்தலாம் என அச்சத்தை வெளியிட்டார்.

எனவே இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இருந்து சிறுபான்மை சமூகத்தையும் அவர்களுடைய உரிமைகளையும் காணிகளையும் கையகப்படுத்துகின்ற முயற்சிகளை தடுத்து நிறுத்த ஜனாதிபதி,பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.


வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் மீது தலைவிரித்தாடும் பௌத்த மேலாதிக்கம். இலங்கைக்கு ஏற்படப்போகும் பேராபத்து samugammedia பயங்கரவாத யுத்தத்தினாலும் பொருளாதார அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட வடகிழக்கு வாழ் மக்கள் மீது பௌத்த மேலாதிக்கமும் தலை விரித்தாடுகின்றது என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட பள்ளி வாசல்கள் சம்மேளன செயலாளருமான எம்.எம்.மஹ்தி சுட்டிக்காட்டினார்.திருகோணமலை மீடியா போர ஊடக மையத்தில் இன்று (08) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,வடகிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம் மக்களின் காணிகள் பல்வேறு வடிவங்களில் கபிலிகரம் செய்யப்படுகின்ற விடயத்தை நாங்கள் நேரடியாக கண்டு கொண்டிருக்கிறோம்.தொல்பொருள் பாதுகாப்பு, புனித பிரதேச பிரகடனம், இராணுவ முகாம், குடியேற்றம், பௌத்த கோயில்கள் அமைப்பு  என பல்வேறு வடிவங்களில் சிறுபான்மை மக்களின் காணிகள் கையகபப்டுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.பல்லின மக்கள் வாழுகின்ற இந்த நாட்டிலே அனைத்து மக்களும் சமத்துவத்தோடு வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டிய இத் தருணத்தில் சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களுடைய காணிகள் மீதும் தொடர்ந்தும் இவ்வாறான கையாகப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்ற போது இந் நாடு பொருளாதாரத்தால் மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாகும் எனவும் சர்வதேச நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்படுகின்ற அபாயத்தை ஏற்படுத்தலாம் என அச்சத்தை வெளியிட்டார்.எனவே இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இருந்து சிறுபான்மை சமூகத்தையும் அவர்களுடைய உரிமைகளையும் காணிகளையும் கையகப்படுத்துகின்ற முயற்சிகளை தடுத்து நிறுத்த ஜனாதிபதி,பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement