• Sep 20 2024

கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதை குழிகள்..! சர்வதேச பொறிமுறையூடாக நீதி கிடைக்க வேண்டும்- ரவிகரன் வலியுறுத்து..!

Sharmi / Aug 20th 2024, 7:38 pm
image

Advertisement

கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதை குழிகள் இருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் இன்றையதினம்(20) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முன்பாக கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம், எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும் என கூறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்து.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே ரவிகரன் இவ்வாறு தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயமானது ஆரம்பத்திலே நீதிமன்றத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போது பலராலும் வைக்கப்பட்ட கோரிக்கை, சர்வதேச பொறிமுறையோடு சர்வதேசத்தினுடைய கண்காணிப்பே வேண்டும். 

யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பீட துறையினை சேர்ந்த மாணவர்களோ, பேராசிரியர்களோ இந்த கண்காணிப்பில் பார்வையிடுதலில் இருக்க வேண்டும். அந்த கோரிக்கைகள் பலவாறாக முன் வைக்கப்பட்டது.

இருந்தும் இவை நடைமுறைப்படுத்தப்பட்டதாக இல்லை. இரண்டு , மூன்று நாட்கள் பரமு புஷ்பரட்ணம் ஐயா வந்திருந்தார். ஆனால் அவரும்  பின்னர் வரவில்லை. ஏனோ தெரியவில்லை. இருந்தாலும் எங்களுக்கு இந்த உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை. 

இலங்கை அரசாங்கமானது எத்தனையோ படுகுழிகளை இலங்கை அரசாங்கத்தினுடைய பார்வையில், கண்டுபிடிக்கப்பட்டும் ஒன்றுக்கும் நீதியான, நேர்மையான வகையில் அறிக்கைகள் வரவில்லை .

1984 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கர்நாட்டுக்கேணி ஆகிய 6 கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த மக்களும் இடம்பெயர்ந்து 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தான் மீள்குடியேற்றப்பட்டார்கள். இப்படி இருக்கும் போது இப் பிரதேசம் இராணுவ பிரதேசமாக இருந்தது.

2009 ஆம் ஆண்டு கையளிக்கப்பட்ட, உறவுகள் வட்டுவாகலில் , கடலில், முகாமில் என்று பலவாறு கையளிக்கப்பட்ட உறவுகள் , சரணடைந்தவர்கள் இந்த புதைகுழியில் அகப்பட்டிருக்கலாம் என்பது மக்களுடைய நம்பிக்கை. எங்களுடைய நம்பிக்கை. 

அப்படி இருக்கும்போது அகழ்வை செய்து இப்போது முடிந்துவிட்டது என கூறிகின்றார்கள். கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் இப்படிப்பட்ட புதை குழிகள் இருக்கிறது என்பது இந்த மக்களுடைய கருத்து. ஆனால் இதற்கான ஒரு நீதி  கிடைக்கவில்லை.  

உள்ளக பொறிமுறையிலே மக்கள் யாருக்குமே நம்பிக்கை இல்லை.  யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை முழு பொய்யுரைப்பவர்களாகத்தான், பொய்களை பேசி வருகின்றார்கள் அறிக்கை இடுகின்றார்கள். தமிழ் மக்களுக்கான நியாயமான எந்த ஒரு கருத்துக்களும் வழங்கப்பட்டதா? என பார்க்க வேண்டும். எங்களுக்கு தேவை சர்வதேச பொறிமுறையூடாக நீதி கிடைக்க வேண்டும். 

எத்தனை தாய்மார் குழந்தைகளை தேடி , பிள்ளைகளை தேடி இறந்து விட்டார்கள். இப்படியான நிலமையில் அவர்களுடைய ஏக்கம், அவர்களுடைய கண்ணீர், இவற்றிற்கு பதில் கூறியே ஆக வேண்டும். எங்களை ஏமாற்ற வேண்டாம். ஆனால் சர்வதேசம் நிச்சயமாக கண்காணித்து நியாயமான தீர்ப்புகளை வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதை குழிகள். சர்வதேச பொறிமுறையூடாக நீதி கிடைக்க வேண்டும்- ரவிகரன் வலியுறுத்து. கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதை குழிகள் இருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் இன்றையதினம்(20) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முன்பாக கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம், எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும் என கூறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்து.குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே ரவிகரன் இவ்வாறு தெரிவித்தார்.கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயமானது ஆரம்பத்திலே நீதிமன்றத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போது பலராலும் வைக்கப்பட்ட கோரிக்கை, சர்வதேச பொறிமுறையோடு சர்வதேசத்தினுடைய கண்காணிப்பே வேண்டும். யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பீட துறையினை சேர்ந்த மாணவர்களோ, பேராசிரியர்களோ இந்த கண்காணிப்பில் பார்வையிடுதலில் இருக்க வேண்டும். அந்த கோரிக்கைகள் பலவாறாக முன் வைக்கப்பட்டது. இருந்தும் இவை நடைமுறைப்படுத்தப்பட்டதாக இல்லை. இரண்டு , மூன்று நாட்கள் பரமு புஷ்பரட்ணம் ஐயா வந்திருந்தார். ஆனால் அவரும்  பின்னர் வரவில்லை. ஏனோ தெரியவில்லை. இருந்தாலும் எங்களுக்கு இந்த உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை. இலங்கை அரசாங்கமானது எத்தனையோ படுகுழிகளை இலங்கை அரசாங்கத்தினுடைய பார்வையில், கண்டுபிடிக்கப்பட்டும் ஒன்றுக்கும் நீதியான, நேர்மையான வகையில் அறிக்கைகள் வரவில்லை .1984 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கர்நாட்டுக்கேணி ஆகிய 6 கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த மக்களும் இடம்பெயர்ந்து 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தான் மீள்குடியேற்றப்பட்டார்கள். இப்படி இருக்கும் போது இப் பிரதேசம் இராணுவ பிரதேசமாக இருந்தது.2009 ஆம் ஆண்டு கையளிக்கப்பட்ட, உறவுகள் வட்டுவாகலில் , கடலில், முகாமில் என்று பலவாறு கையளிக்கப்பட்ட உறவுகள் , சரணடைந்தவர்கள் இந்த புதைகுழியில் அகப்பட்டிருக்கலாம் என்பது மக்களுடைய நம்பிக்கை. எங்களுடைய நம்பிக்கை. அப்படி இருக்கும்போது அகழ்வை செய்து இப்போது முடிந்துவிட்டது என கூறிகின்றார்கள். கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் இப்படிப்பட்ட புதை குழிகள் இருக்கிறது என்பது இந்த மக்களுடைய கருத்து. ஆனால் இதற்கான ஒரு நீதி  கிடைக்கவில்லை.  உள்ளக பொறிமுறையிலே மக்கள் யாருக்குமே நம்பிக்கை இல்லை.  யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை முழு பொய்யுரைப்பவர்களாகத்தான், பொய்களை பேசி வருகின்றார்கள் அறிக்கை இடுகின்றார்கள். தமிழ் மக்களுக்கான நியாயமான எந்த ஒரு கருத்துக்களும் வழங்கப்பட்டதா என பார்க்க வேண்டும். எங்களுக்கு தேவை சர்வதேச பொறிமுறையூடாக நீதி கிடைக்க வேண்டும். எத்தனை தாய்மார் குழந்தைகளை தேடி , பிள்ளைகளை தேடி இறந்து விட்டார்கள். இப்படியான நிலமையில் அவர்களுடைய ஏக்கம், அவர்களுடைய கண்ணீர், இவற்றிற்கு பதில் கூறியே ஆக வேண்டும். எங்களை ஏமாற்ற வேண்டாம். ஆனால் சர்வதேசம் நிச்சயமாக கண்காணித்து நியாயமான தீர்ப்புகளை வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement