• Nov 14 2024

திருகோணமலையில் இந்தியத் தூதரகத்தினால் : 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு

Tharmini / Nov 4th 2024, 9:30 am
image

வரலாற்று ரீதியாக இலங்கையின் மீனவ சமூகத்தின் தாயகமாக சிறந்து விளங்கும் திருகோணமலை நகரத்தில் மீன்பிடித்தல் என்பது இங்கு ஒரு தொழில் மட்டுமல்ல.

ஒரு வாழ்க்கை முறையாகும், இது பழங்கால பாரம்பரியமாக செய்துவரும் இத்தொழில் மூலம் பல்லாயிரம் குடும்பங்களுக்கான  வாழ்வாதாரத்தை வழங்குகிறது என்று இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இந்தியாவின் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இந்திய தூதரகத்தினால் திருகோணமலையிலுள்ள 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 

திருகோணமலை கடற்றொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் ரவிக்குமார் தலைமையில் நேற்று (03 திருகோணமலை திருக்கடலூர் மீனவர்கள் வர்த்தக சங்கக்கட்டடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்துகொண்டு மீனவர்களுக்கான உபகரணங்களை வழங்கிவைத்து உரையாற்றும்போதே அவர், இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,இப்பகுதி மக்களுக்கு உணவு, வருமானம் மற்றும் தேவைகளுக்கான நம்பிக்கையை கடலன்னை வழங்கியுள்ளது.

இலங்கைக்கு இந்தியா வழங்கிய பெரிய அபிவிருத்தி ஒத்துழைப்பு உதவிகளின் வரிசையில், இந்த நாட்டின் மீனவ சமூகத்தை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும், மேம்படுத்துவதற்குமான  எமது முயற்சி முக்கிய இடத்தில் உள்ளது. 2009- 2010 ஆம் ஆண்டு உள்நாட்டு ஆயுத மோதலை அடுத்து உள்நாட்டில் இடம்பெயர்ந்த மீனவர்கள் உள்ளிட்ட மீனவர்களுக்கு கடந்த காலங்களில் மீன்பிடி உபகரணங்களை வழங்கிய பல நிகழ்வுகளும் இதில் அடங்கும்.

கிழக்கு மாகாணத்தின் பல்துறைசார் மானிய உதவிகளுக்கென சுமார் 2.35 பில்லியன் இலங்கை ரூபாய்களை ஒதுக்க இந்தியா உறுதியளித்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.   

வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான 33 திட்டங்களுக்கான, கட்டமைப்பு திட்டங்கள்  இறுதி செய்யப்பட உள்ளன. 

இவற்றில், 7 மீன்பிடித் திட்டங்கள் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், மீன்பிடி உபகரணங்களை வழங்குவது மட்டுமல்லாமல், நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு, கடற்பாசி கூண்டு வளர்ப்பு, திலாப்பியா குளத்து மீன் வளர்ப்பு மற்றும் பருவகால தொட்டி மேம்பாடு போன்ற கருப்பொருள்கள் உள்ளடங்கியுள்ளன. 

 இன்று உங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில், கடின உழைப்பாளிகளான திருகோணமலை மீனவர்களுக்கு, அபிவிருத்தி உதவிப் பொதியை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த உதவித் தொகுதியில், படகுகளுக்கான வெளியிணைப்பு  இயந்திரம், பிடித்த மீன்களை பாதுகாக்க கூடிய உறைவிக்கும் இயந்திரங்கள் மற்றும் உயிர்காப்பு அங்கிகள்  ஆகியவை அடங்கும். 

இவை உங்கள் அன்றாட நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகிய இரண்டையும் மேம்படுத்த உதவும் அத்தியாவசியமான கருவிகள்.

ஆழமான உறைவிப்பான்கள் உங்களால் பிடிக்கப்பட்ட மீன்களை தரம்கெடாது பேணுவதை உறுதி செய்யும் அதேவேளையில், உங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்கும் பங்களிக்கும். கடலில் சிக்கித்தவிக்கும் அல்லது விபத்துகளை சந்திக்கும் மீனவர்களையும் மற்றும் அவர்களது படகுகளை பாதுகாப்பாக மீட்பதற்கு அதிக வலுகொண்ட வெளியிணைப்பு இயந்திரங்கள் மற்றும் உயிர் காப்பு அங்கிகள் முக்கியமான ஆதரவை வழங்கும்.

இந்தியாவும் இலங்கையும் நமது கரையோரங்களை இணைக்கும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் இந்தியப் பெருங்கடலில் வேரூன்றிய ஆழமான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. 

கடந்த வாரம், இந்தியா - இலங்கை மீன்வளத்துறையின் கூட்டுப் பணிக்குழுவின் 6வது கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் மீனவர்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் விரிவாக ஆய்வு செய்தனர்.

இலங்கையில் மீன்பிடித் தொழிலின் முக்கியத்துவத்தையும், மீனவர்களாகிய நீங்கள், இயற்கையாலும், சந்தைப்படுத்துவதில் உள்ள விடயங்களாலும், நவீன உபகரணங்களை அணுகுவதன் மூலமும் எதிர்கொள்ளும் சவால்களையும்  இந்தியாவில் உள்ள  நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த நட்புறவு மற்றும் கூட்டாண்மையின் உணர்வில்தான் இந்தியா இலங்கைக்குத் தேவையான நேரங்களில் தொடர்ந்து துணை நின்றது. இனியும் நிற்கும். இன்றைய உதவி அந்த திசையில் பயணிப்பதற்கான மற்றொரு படியாகும்.

இந்தமுயற்சி பொருளுதவி வழங்குவது மட்டுமல்ல, திருகோணமலை மீனவ சமூகத்தின் நிலையான எதிர்கால சமூகங்களை வலுப்படுத்துவதும், அதற்கான முதலீடுகளை  செய்வதுமாகும்.

வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும் எங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தையும் உறவையும் தொடர்ந்து வலுப்படுத்துவோம். நமது பகிரப்பட்ட எதிர்காலம் செழிப்பு, அமைதி மற்றும் முன்னேற்றம் கொண்டதாக இருப்பதை உறுதிசெய்ய நமது அரசாங்கங்கள், நமது மக்கள் மற்றும் நமது சமூகங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படும்.

இந்த உதவி மூலம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். நீங்கள் இந்த பிராந்தியத்தின் முதுகெலும்பு.

உங்கள் வெற்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். உங்கள் வலைகள் எப்போதும் நிரம்பியிருக்கவும், கடலுக்கு செல்லும் எமது மீனவ உறவுகள்  அனைவரும் பாதுகாப்பாக   கரைக்குத் திரும்பவும் வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.




திருகோணமலையில் இந்தியத் தூதரகத்தினால் : 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு வரலாற்று ரீதியாக இலங்கையின் மீனவ சமூகத்தின் தாயகமாக சிறந்து விளங்கும் திருகோணமலை நகரத்தில் மீன்பிடித்தல் என்பது இங்கு ஒரு தொழில் மட்டுமல்ல.ஒரு வாழ்க்கை முறையாகும், இது பழங்கால பாரம்பரியமாக செய்துவரும் இத்தொழில் மூலம் பல்லாயிரம் குடும்பங்களுக்கான  வாழ்வாதாரத்தை வழங்குகிறது என்று இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.இலங்கை மற்றும் இந்தியாவின் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இந்திய தூதரகத்தினால் திருகோணமலையிலுள்ள 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலை கடற்றொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் ரவிக்குமார் தலைமையில் நேற்று (03 திருகோணமலை திருக்கடலூர் மீனவர்கள் வர்த்தக சங்கக்கட்டடத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்துகொண்டு மீனவர்களுக்கான உபகரணங்களை வழங்கிவைத்து உரையாற்றும்போதே அவர், இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,இப்பகுதி மக்களுக்கு உணவு, வருமானம் மற்றும் தேவைகளுக்கான நம்பிக்கையை கடலன்னை வழங்கியுள்ளது.இலங்கைக்கு இந்தியா வழங்கிய பெரிய அபிவிருத்தி ஒத்துழைப்பு உதவிகளின் வரிசையில், இந்த நாட்டின் மீனவ சமூகத்தை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும், மேம்படுத்துவதற்குமான  எமது முயற்சி முக்கிய இடத்தில் உள்ளது. 2009- 2010 ஆம் ஆண்டு உள்நாட்டு ஆயுத மோதலை அடுத்து உள்நாட்டில் இடம்பெயர்ந்த மீனவர்கள் உள்ளிட்ட மீனவர்களுக்கு கடந்த காலங்களில் மீன்பிடி உபகரணங்களை வழங்கிய பல நிகழ்வுகளும் இதில் அடங்கும்.கிழக்கு மாகாணத்தின் பல்துறைசார் மானிய உதவிகளுக்கென சுமார் 2.35 பில்லியன் இலங்கை ரூபாய்களை ஒதுக்க இந்தியா உறுதியளித்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.   வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான 33 திட்டங்களுக்கான, கட்டமைப்பு திட்டங்கள்  இறுதி செய்யப்பட உள்ளன. இவற்றில், 7 மீன்பிடித் திட்டங்கள் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், மீன்பிடி உபகரணங்களை வழங்குவது மட்டுமல்லாமல், நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு, கடற்பாசி கூண்டு வளர்ப்பு, திலாப்பியா குளத்து மீன் வளர்ப்பு மற்றும் பருவகால தொட்டி மேம்பாடு போன்ற கருப்பொருள்கள் உள்ளடங்கியுள்ளன.  இன்று உங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில், கடின உழைப்பாளிகளான திருகோணமலை மீனவர்களுக்கு, அபிவிருத்தி உதவிப் பொதியை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உதவித் தொகுதியில், படகுகளுக்கான வெளியிணைப்பு  இயந்திரம், பிடித்த மீன்களை பாதுகாக்க கூடிய உறைவிக்கும் இயந்திரங்கள் மற்றும் உயிர்காப்பு அங்கிகள்  ஆகியவை அடங்கும். இவை உங்கள் அன்றாட நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகிய இரண்டையும் மேம்படுத்த உதவும் அத்தியாவசியமான கருவிகள்.ஆழமான உறைவிப்பான்கள் உங்களால் பிடிக்கப்பட்ட மீன்களை தரம்கெடாது பேணுவதை உறுதி செய்யும் அதேவேளையில், உங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்கும் பங்களிக்கும். கடலில் சிக்கித்தவிக்கும் அல்லது விபத்துகளை சந்திக்கும் மீனவர்களையும் மற்றும் அவர்களது படகுகளை பாதுகாப்பாக மீட்பதற்கு அதிக வலுகொண்ட வெளியிணைப்பு இயந்திரங்கள் மற்றும் உயிர் காப்பு அங்கிகள் முக்கியமான ஆதரவை வழங்கும்.இந்தியாவும் இலங்கையும் நமது கரையோரங்களை இணைக்கும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் இந்தியப் பெருங்கடலில் வேரூன்றிய ஆழமான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. கடந்த வாரம், இந்தியா - இலங்கை மீன்வளத்துறையின் கூட்டுப் பணிக்குழுவின் 6வது கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் மீனவர்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் விரிவாக ஆய்வு செய்தனர்.இலங்கையில் மீன்பிடித் தொழிலின் முக்கியத்துவத்தையும், மீனவர்களாகிய நீங்கள், இயற்கையாலும், சந்தைப்படுத்துவதில் உள்ள விடயங்களாலும், நவீன உபகரணங்களை அணுகுவதன் மூலமும் எதிர்கொள்ளும் சவால்களையும்  இந்தியாவில் உள்ள  நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த நட்புறவு மற்றும் கூட்டாண்மையின் உணர்வில்தான் இந்தியா இலங்கைக்குத் தேவையான நேரங்களில் தொடர்ந்து துணை நின்றது. இனியும் நிற்கும். இன்றைய உதவி அந்த திசையில் பயணிப்பதற்கான மற்றொரு படியாகும்.இந்தமுயற்சி பொருளுதவி வழங்குவது மட்டுமல்ல, திருகோணமலை மீனவ சமூகத்தின் நிலையான எதிர்கால சமூகங்களை வலுப்படுத்துவதும், அதற்கான முதலீடுகளை  செய்வதுமாகும்.வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும் எங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும்.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தையும் உறவையும் தொடர்ந்து வலுப்படுத்துவோம். நமது பகிரப்பட்ட எதிர்காலம் செழிப்பு, அமைதி மற்றும் முன்னேற்றம் கொண்டதாக இருப்பதை உறுதிசெய்ய நமது அரசாங்கங்கள், நமது மக்கள் மற்றும் நமது சமூகங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படும்.இந்த உதவி மூலம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். நீங்கள் இந்த பிராந்தியத்தின் முதுகெலும்பு.உங்கள் வெற்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். உங்கள் வலைகள் எப்போதும் நிரம்பியிருக்கவும், கடலுக்கு செல்லும் எமது மீனவ உறவுகள்  அனைவரும் பாதுகாப்பாக   கரைக்குத் திரும்பவும் வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement