• Dec 19 2024

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

Chithra / Dec 19th 2024, 11:52 am
image

 

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில் அதற்குத் தீர்வாகப் பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். 

அதற்கமைய, பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் டன் உச்ச அளவுக்கு உட்பட்ட உப்பை ஜனவரி 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபத்தின் மூலம் இறக்குமதி செய்து உள்நாட்டு உப்பு உற்பத்தியாளர்கள் ஊடாக சந்தைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி  உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்குத் தீர்வாகப் பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கமைய, பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் டன் உச்ச அளவுக்கு உட்பட்ட உப்பை ஜனவரி 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபத்தின் மூலம் இறக்குமதி செய்து உள்நாட்டு உப்பு உற்பத்தியாளர்கள் ஊடாக சந்தைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Advertisement

Advertisement

Advertisement